எதியோப்கிய விமானம் விழுந்தமைக்கு எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரத்தில் இருந்த குறைபாடே காரணமாக இருக்கலாம் என்று முதலாவது செய்தி வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் வேள் ஸ் ரீற் யேணல் முதலாவது தகவலை கசிய விட்டிருக்கிறது.
எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரம் புதிய வகை சாப்ற்வெயர்.. இது விமானத்தை தானியங்கி மூலம் சமநிலைப்படுத்தும் தானியங்கி ஏற்பாடு.
M- Maneuvering
C- Characteristics
A- Augmentation
S- system
இதன் சென்சார்களில் ஏற்பட்ட பிழை விமானத்தை தரையில் மோத வைத்துள்ளது.
இப்போது புதிய முறை அமலுக்கு வரவுள்ளது. விமானி தானே இயக்கும்படியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக போயிங் இரண்டு விபத்துக்களில் 346 பேரை பலி கொடுத்து இந்தப் பாடத்தை படித்துள்ளது.
அக்டோபர் 29 இந்தோனீசிய லயன் எயார் விழுந்தபோது கண்டு பிடித்திருக்க வேண்டும்.
இப்பொழுது வேள் ஸ் ரீற் யேணல் எம்.சி.ஏ.எஸ் சிஸ்ரம் பிழைத்ததே காரணமாக இருக்கலாம் என்று கூறியிருக்கிறது.
மக்கள் மனதளவில் தயாராக இந்த தகவல் வெளியானதா தெரியவில்லை.. ஆனால் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது தெரிந்ததே.
எதியோப்பியாவுக்கு சொந்தமான போயிங் 737 மக்ஸ் 8 இரக விமானம் இம்மாதம் 10 ம் திகதி விழுந்து நொருங்கி 157 பேர் மரணித்தது தெரிந்ததே.
இந்த விமானத்தின் கறுப்பு பெட்டி பரிசோதிக்கப்படுகிறது, இவ்வாரம் தகவல் வெளி வருமேன கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை வேள் ஸ் ரீற் யோணல் முதல் அலாரத்தை அடித்துள்ளது.
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..
காணொளி செய்தி தயாராகிறது..
அலைகள் 29.03.2019