டென்மார்க்கில் 100 வது பிறந்த நாளை கொண்டாடும் ருய்ரா என்ற பெண்மணியின் தொலைக்காட்சி நிகழ்ச்சி இன்று இரவு 20.45 மணிக்கு டென்மார்க் தொலைக்காட்சி சேவை 1 ல் ஒளிபரப்பாக இருக்கிறது.
ருய்ரா என்ன இந்தப் பெண்மணி 1918 நவம்பர் 28ம் திகதி பிறந்திருக்கிறார். அவருடைய பிறந்த நாள் ஞாபகத்தில் இன்றும் இருக்கிறது.
தனது 100 வயது அனுவபத்தில் இவர் என்ன சொல்கிறார்..
01. கடந்த காலம் திரும்பி வராது..
02. நான் மறுபடியும் குழந்தையாக முடியாது..
03. எனது பிள்ளைப் பருவத்துடன் ஒப்பிட்டால் இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது.
04. எனது பாடசாலை காலம் மகிழ்வானது ஆனால் எல்லோரும் திக்கு திக்காக போய்விட்டோம்.
05. இந்த இனிய நாட்கள் மறுபடியும் வராது என்று நினைத்து இந்த நாளை மகிழ்வுடன் வாழ வேண்டும்.
06. இன்று எல்லாமே வேகமாகப் போகிறது வாழ்வதற்குத்தான் எம்மிடம் நேரம் இல்லை.
07. நாங்கள் மனிதர்கள் அமைதியான வாழ்வுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.
08. கல்வி என்பது முக்கியமானது.
09. பெற்றோர் கல்விகற்க பிள்ளைகளுக்கு உதவ வேண்டும்.
10. பிள்ளைகள் கற்ற முறைப்படி வாழ வேண்டும்.
11. ஆனால் இன்றுள்ள கல்வி முறையில் மாற்றம் வேண்டும்.
12. எல்லோரும் சொந்தக்காலில் நிற்கும்படியாக கல்விக்கட்டமைவு மாற்றப்பட வேண்டும்.
13. கல்வியால் நீ பெற்ற ஆற்றலை இந்த உலகத்திற்கு வழங்க வேண்டும் என்கிறார்.
முடியுமா நம்மால்..?
டென்மார்க்கில் இப்போது கார்லா என்ற பெண்மணி இருக்கிறார். இவருக்கு வயது 110 இவரே தற்போது டென்மார்க்கில் கூடிய வயதுடையவர்.
அலைகள் 27.03.2019 புதன்