சாதியை காப்பாற்றவே திருமணத்திற்கு பெற்றோர் ஒப்புதல்..! பெண்கள் எதிர்ப்பு

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை முதலாவதாக வெளியிட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடி, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மது – புகையிலை ஒழிப்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்களுக்காக வரவேற்கப்பட்ட இந்தத் தேர்தல் அறிக்கை, பெண்கள் குறித்த வாக்குறுதி ஒன்றுக்காக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. “சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் இளம் வயதினரின் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. மிக இளம் வயதில் நாடகக் காதலால் இளம் பெண்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கவும், குடும்ப அமைப்பைக் காக்கும் வகையிலும், வளரிளம் பருவத்தினரின் எதிர்கால நலன் காக்கவும் 21 வயதுக்குக் கீழானவர்களின் திருமணத்திற்கு இருதரப்பு பெற்றோரின் ஒப்புதலைக் கட்டாயமாக்க வழி செய்வோம்” என்ற வாக்குறுதி தான் அது. பாமகவின் அதே தேர்தல் அறிக்கையில் திருமணம்…