ஐ.நா. வின் துணைக்குழு இன்று இலங்கைக்கு
சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு இன்று இலங்கை வரவுள்ளது.
நான்கு பேர் கொண்ட இந்தக் குழு ஏப்ரல் 12 வரை இலங்கையில் தங்கியிருக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோல்டோ, மொரிஷியஸ், சைப்ரஸ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தக் குழவில் அடங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள், அரச அதிகாரிகள், மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சிவில் அமைப்புக்களையும் சந்திக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் 22ம் திகதி வரை இடம்பெற்ற கூட்டத் தொடர் ஒன்றில் சித்திரவதையை தடுப்பு சம்பந்தமான தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் துணைக்குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது.
—————
பிரான்ஸ் தூதுவர் – வடமாகாண ஆளுநர் சந்திப்பு..!
இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டு தூதுவர் Eric LAVERTU, ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை நேற்று (01) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
வடக்கிற்கான தனது முதலாவது விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் தூதுவரை உற்சாகமாக வரவேற்ற ஆளுநர், வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தினார்.
யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் வடமாகாணத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை நிலையில் பாரியதொரு மாற்றம் இன்னும் ஏற்படாமல் அவர்கள் இன்றும் கடினமான சூழ்நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடிப்படையிலான வழிமுறைகளை மேற்கொள்ள முயற்சி செய்து வருவதாக ஆளுநர் அவர்கள் பிரான்ஸ் தூதுவருக்கு தெரிவித்ததுடன், இந்த மாற்றத்தை ஏற்படுத்த பிரான்ஸ் அரசினால் மேற்கொள்ளக்கூடிய உதவிகளை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் நீர்ப்பிரச்சனை காணப்படுவதுடன் அதனை நிவர்த்தி செய்வதற்கு சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதுடன் இந்த நீர்ப்பிரச்சனையை தீர்ப்பதற்கு தற்போது 4 பிரதான திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதை குறிப்பிட்ட ஆளுநர், இவற்றிற்கு பிரான்ஸ் நாட்டினால் வழங்கக்கூடிய உதவிகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆராயுமாறு பிரான்ஸ் தூதுவரிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், வடமாகாண இளைஞர்கள் மத்தியில் சமூக கலந்துரையாடல்களை ஏற்படுத்தக்கூடிய திரைப்படங்களின் திரையிடல்களை ஒழுங்குசெய்யுமாறு ஆளுநர் பிரான்ஸ் தூதுவரிடம் இந்த சந்திப்பின்போது கேட்டுக்கொண்டார்.
ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆக்கபூர்வமாக அமைந்திருந்தமையை சுட்டிக்காட்டிய பிரான்ஸ் தூதுவர், பிரான்ஸ் நாட்டினால் வடமாகாணத்தில் மேற்கொள்ளக்கூடிய உதவிகள் திட்டங்கள் குறித்து ஆராய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.
—————-
போதைப்பொருள் வர்த்தகம்; 6.5 இலட்சம் பேர் கைது..!
2008 முதல் 2019ஆம் ஆண்டுக்கு உட்பட்ட 10 ஆண்டு காலப்பகுதியில் ஹெரோயின் கஞ்சா வியாபாரத்துடன் தொடர்புடைய 6.5 இலட்சம் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை பொலிஸ் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், 2 இலட்சத்து 30 ஆயிரம் பேர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் பிரிவு, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு, புலனாய்வுப் பிரிவு, இலங்கை இராணுவம், சுங்கத் திணைக்களம் உட்பட நாட்டின் பாதுகாப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளின் அடிப்படையிலேயே இவ்வளவு பேரை சட்டத்தின் முன் நிறுத்த முடிந்துள்ளது. இவர்களிடமிருந்து மொத்தமாகஅண்ணளவாக 3டொன் வரை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்படி 10ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 2டொன் கொக்கெயினும் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொக்கெயினின் விலை அதிகமாகவுள்ளதால் நாட்டின் செல்வந்த வர்க்கத்தினர் மாத்திரமே இதனைப் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் ஹெரோயின் ஒரு கிலோவின் விலை 1 கோடியாகவுள்ளதுடன், கொக்கெயின் ஒரு கிலோவின் விலை 2கோடியாகவுள்ளது. அத்துடன், கேரள கஞ்ஜா மற்றும் கஞ்ஜா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 4இலட்சத்து 15ஆயிரத்து 56பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்ணளவாக 3டொன்வரை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை, மேற்படி 10ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் 2 டொன் கொக்கெயினும் பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொக்கெயினின் விலை அதிகமாகவுள்ளதால் நாட்டின் செல்வந்த வர்க்கத்தினர் மாத்திரமே இதனைப் பயன்படுத்துகின்றனர். இன்றைய சூழலில் ஹெரோயின் ஒரு கிலோவின் விலை 1 கோடியாகவுள்ளதுடன், கொக்கெயின் ஒரு கிலோவின் விலை 2 கோடியாகவுள்ளது. அத்துடன், கேரள கஞ்ஜா மற்றும் கஞ்ஜா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 4 இலட்சத்து 15ஆயிரத்து 56 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொலிஸ் மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
————–
ஜனாதிபதி ஊடக விருது 10ஆம் திகதி..!
ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் பணிக்காகவும் அவர்களின் ஊடகப் பங்களிப்பை கௌரவிக்கும் முகமாகவும் முதலாவது ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா ஏப்ரல் 10ம் திகதி மாலை 4.00மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் சிறந்த நினைவு குறிப்பாக இந்த விழா நடைபெறவுள்ளதாக ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர தெரிவித்தார். கொழும்பு 05நாரஹேண்பிட்டியில் அமைந்துள்ள ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (01) பகல் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழா 2018 ஐ சிறப்பாக நடத்த ஊடக அமைச்சு அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் கூறிய அவர், ஜனாதிபதி ஊடக விருதை பெற்றுக்கொள்ள தகுதியான ஊடகவியலாளர்களை தெரிவு செய்வது முற்றிலும் சுயாதீனமான ஒரு குழுவால் சுதந்திரமாக, பாரபட்சமின்றி மேற்கொள்ளப்பட்டதென தெரிவித்தார்.