மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு ‘இந்து தமிழ் திசை’ இணையதளம் சார்பில் கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அவறின் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டன.
அதன் தொகுப்பு:
திமுக கூட்டணி- 33 இடங்கள்
திமுக -17
காங்கிரஸ் -8
மதிமுக -1
இந்திய கம்யூனிஸ்ட்-2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1
விடுதலை சிறுத்தைகள் கட்சி-1
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி-1
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி-1
இந்திய ஜனநாயகக் கட்சி-1
மொத்தம்-33
திராவிட முன்னேற்றக் கழகம் 17 இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்,வேலூர், திருவண்ணாலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்கள் திமுக வசமாகும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸ் 8 இடங்களைக் கைப்பற்றுகிறது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி ஆகிய 8 தொகுதிகளில் காங்கிரஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் மதிமுக – ஈரோடு, இந்திய கம்யூனிஸ்ட் – திருப்பூர் மற்றும் நாகப்பட்டினம், மார்க்சிஸ்ட் – மதுரை, விடுதலை சிறுத்தைகள் – சிதம்பரம் ஆகிய தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதேபோல கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி நாமக்கல்லிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ராமநாதபுரத்திலும் இந்திய ஜனநாயகக் கட்சி பெரம்பலூரிலும் வெற்றிவாகை சூடும் என்று தெரியவருகிறது.
திமுக கூட்டணி – 4 இடங்கள்
அதிமுக 0
பாஜக 1
பாமக 3
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் – 1
இழுபறி – 2
கருத்துக் கணிப்பு முடிவுகளில் பாஜக கன்னியாகுமரியில் வெற்றிவாகை சூடுகிறது. பாமக அரக்கோணம், கடலூர் மற்றும் தருமபுரியில் வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அமமுக சார்பில் தேனி தொகுதி தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக உள்ளது. விழுப்புரம் மற்றும் கோயம்புத்தூர் தொகுதிகள் இழுபறியில் உள்ளன.