01. வெற்றிக்கான ஒரு முக்கிய அம்சம் தானாக வந்து முயற்சிப்பதாகும். நீங்கள் முன்னேற முடியாதபடி நீங்களே உங்களை இழுத்துப் பிடித்திருப்பதை கண்டு பிடிக்காவிட்டால் தோல்வி வரும்.
02. நீங்கள் அதிக மதிப்பில்லாதவர் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் இருந்தால் அதை நீக்கிவிடுங்கள்.
03. உங்களால் முன்னேற முடியாது என்பதற்கான காரணங்களை நீங்களே உங்களுக்குக் கூறி உங்களை நீங்களே தாழ்த்துவதை கண்டுபிடியுங்கள் அதை மாற்றுங்கள்.
04. உங்களை நீங்கள் நம்பாவிட்டால் மற்றவர்கள் உங்களை ஒருபோதும் நம்பமாட்டார்கள்.
05. உங்கள் மனம் ஒரு சிந்தனை தொழிற்சாலை.. அது மிகவும் சுறுசுறுப்பான தொழிற்சாலை. அத்தொழிற்சாலை தினசரி எண்ணற்ற சிந்தனைகளை உற்பத்தி செய்கிறது. உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ள கொள்ள அதுவும் நம்பிக்கை மலர்களை பூத்து குலுங்கத் தொடங்கும்.
06. உங்களால் ஏன் சாதிக்க முடியும் என்ற காரணங்களை தொடர்ந்து மனதில் உற்பத்தி செய்யுங்கள்.
07. இது ஒரு வெற்றியான நாள் என்ற சமிக்ஞை கொடுங்கள்.. இன்றைய பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடிப்பேன் என்ற சமிக்ஞை கொடுங்கள், அவை நடக்கத் தொடங்கும் அப்படியே..
08. மனதை இயக்கும் தோல்வியாளரை வேலையை விட்டு நீக்குவதுதான் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை. அதுதான் புத்திசாலித்தனமான விடயமுமாகும்.
09. உங்களால் முடியாது நீங்கள் தோற்றுவிடுவீர்கள் என்று கருதினால் அதோகதிதான் தோல்வி தானாக வந்து சேர்ந்துவிடும்.
10. மனதில் 100 சதவீதமும் வெற்றியாளரையே பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்காக செயற்படும்படி வெற்றியாளருக்கு கட்டளையிடுங்கள். உங்களால் வெற்றிபெற முடியும் என்பதற்கு அவர் வழிகாட்டுவார்.
11. தலைமை தாங்கி நடத்தக்கூடிய தலைவருக்கு பற்றாக்குறை எப்போதுமே நிலவுவதை மறந்துவிடாதீர்கள்.
12. பயம், தாங்கள் முக்கியமற்றவர்கள் என்ற நினைப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் துயரத்திலேயே உழன்று கொண்டிருக்கின்றனர்.
13. வாய்ப்புக்களை வெகுமதியாக மாற்றிக் கொள்ளுகின்றவர்களே அறிவார்ந்த மக்களாகும். தங்கள் சிந்தனை மூலம் தங்களை வெற்றியாளர்களாக மாற்ற இவர்கள் தெரிந்துள்ளனர்.
14. வெற்றிக்கான கதவு முன்பு எப்போதையும் விட மிக அகலமாகத் திறந்துள்ளது. அதன் மூலம் வீறு நடை போட்டு செல்லுங்கள். வாழ்வில் தாங்கள் விரும்பிய அனைத்தையும் பெறும் மக்கள் குழுக்களில் நீங்களும் இணையுங்கள்.
15. வெற்றியை நோக்கி நீங்கள் எடுத்து வைக்க வேண்டிய முதல் அடி இதுதான். அதன் பெயர் அடிப்படை நடவடிக்கையாகும். உங்களால் முடியும் என்று நம்புங்கள் அதுதான் அடிப்படை நடவடிக்கையாகும்.
16. தோல்வியை பற்றி சிந்திப்பதை விடுத்து வெற்றியை பற்றியே சிந்தியுங்கள். உங்கள் வேலையிலும் வீட்டிலும் வெற்றியை பற்றியே சிந்தியுங்கள். எப்போதுமே வெற்றி குறித்த எண்ணங்களிலேயே ஈடுபடுங்கள்.
17. நான் தோற்றுவிடுவேன் என்று சிந்திப்பதற்கு பதிலாக நான் வென்றுவிடுவேன் என்று சிந்தியுங்கள்.
18. ஓர் அற்புதமான வாய்ப்பு கிடைக்கும்போது இதை என்னால் சாதிக்க முடியும் என்று நினையுங்கள்.
19. நான் வெற்றி பெறுவேன் என்ற உச்சக்கட்ட எண்ணம் உங்கள் சிந்தனைச் செயல்முறை மீது ஆதிக்கம் செலுத்த செய்யுங்கள்.
20. வெற்றியை பெற்றுக் கொடுக்கும் சிந்தனையை உருவாக்குவது, திட்டங்களை உருவாக்குவது, போன்றவற்றை சிந்தனை மீது ஆதிக்கம் செலுத்த செய்யுங்கள்.
21. நீங்கள் நினைப்பதைவிட நீங்கள் சிறந்தவர் என்பதை அடிக்கடி நீங்களே உங்களுக்கு நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
22. வெற்றியாளர் அனைவரும் சூப்பர் மேன் அல்ல.. வெற்றி பெற நீங்கள் அதி புத்திசாலியாக இருக்க வேண்டியதும் இல்லை. வெற்றியில் எந்த மர்மமும் இல்லை. அது அதிர்ஷ்டத்தை சார்ந்ததும் அல்ல.
23. வெற்றி பெற்ற மக்கள் அனைவரும் தங்கள் மீதும் தாங்கள் செய்கின்ற செயல்கள் மீதும் நம்பிக்கை வைத்துள்ள சாதாரண மக்களே. உங்களை நீங்களே ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
24. உங்கள் நம்பிக்கையின் அளவுதான் உங்கள் வெற்றியின் அளவை தீர்மானிக்கிறது.
25. சிறிய இலக்குகளை சிந்தித்தால் சிறிய சாதனைகளை மட்டுமே படைப்பீர்கள்.. பெரிய இலக்குகளை வைத்தால் பெரிய சாதனைகளை படைப்பீர்கள். சிறிய திட்டங்களை விட பெரிய திட்டங்கள் ஒன்றும் கடினமானவை அல்ல. பெரிய திட்டங்கள் பெரும்பாலும் சுலபமானவையாகவே இருக்கின்றன.
அலைகள் 10.04.2019