வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவாகும்.
வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.
ஆனால் தென்கொரியா செய்த இச்சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை.எனவே ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது தகவல்கள் வெளியாகியுள்ளது.