சின்னக்குயில் சித்ராவின் குரலில் ஒலிக்கும் பாடல்களை கேட்டு லட்சக்கணக்கான ரசிகர்கள் சந்தோஷத்தில் மூழ்கி விடுகின்றனர்.
ஆனால் சித்ராவோ சோகமும் வெறுமையுமாக முகாரி ராகத்தில் காலத்தை கழித்து வருகிறார். 8 வருடங்களுக்கு முன் சித்ராவை கண்ணீரோடு தவிக்க விட்டு மறைந்தார் அவரது மகள் நந்தனா.
மகளின் நினைவுநாளில் சித்ரா ஒரு கடிதம்எழுதி நெட்டில் பகிர்ந்தார். ‘பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாட்கள் பறந்துவிட்டன.
ஆனால் ஞாபகங்கள் இன்னும் நினைவில் பொறிக்கப்பட்டுள்ளன. என் வாழ்க்கை வெறுமையும், சோகமுமாக மாறிவிட்டது.
உன்னை இழந்து வாடுகிறேன் நந்தனா’ என குழந்தையுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் சித்ரா. அவரது கடித்தை படித்தவர்கள் கண்ணீர் மொட்டுக்களை உதிர்க்கின்றனர்.
கடந்த 2011ம் ஆண்டு இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சித்ரா தனது குழந்தை நந்தனாவுடன் துபாய் சென்றார்.
அங்குள்ள அறையில் தங்கியிருந்தபோது நந்தனா நீச்சல் குளத்தில் தவறி விழுந்து மூழ்கி இறந்தார்.