ஒரு கொலையின் சரித்திரம்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்து விடுகிறது போலிருக்கும். அதனால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. நீதிமொழிகள் 17:14
தன்னுடைய கோபத்தை மேற்கொள்பவன் ஒருவலுவான எதிரியை மேற்கொள்கிறான்
அண்மையில் இலங்கையில் நடந்த இரக்கமற்ற செயலினால் அநியாயமாக உயிரை இழந்த மக்களின் குடும்பத்தினருக்கு டென்மார்க்கில் உள்ள தமிழ்மக்கள் சார்பாக அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, தேவன்தாமே தேவ சமாதானத்தால் அவர்களை நிரப்பி, அமைதியைக் கொடுத்து, அமைதி வாழ்க்கை வாழவழி செய்வாராக!
சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் தென்அமெரிக்காவில் நடந்த ஒரு துயரமான வன்முறைச் சம்பவத்தை தெலைக்காட்சியில் பார்த்தேன். விவசாயத் தொழில் செய்யும் ஒருவர் தன்னுடை நெருங்கிய நண்பர் ஒருவருடன் அரசியலைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபோது அவரைக் கொன்று விட்டார். அவரிடம் ஏன் அப்படிச் செய்தீர் என கேட்டபோது, அவர் கூறிய பதில் இன்று நம்மைத் திகைக்க வைக்கிறது. நாம் எமது விவாதத்தை சமாதானத்தோடு துவக்கினோம். நாம் தொடர்ந்து விவாதித்துக் கொண்டிருந்தோம். விவாதத்தில், என்னால் வெல்லமுடியாது என உணர்ந்தபோது நான் அவரைக் கொன்றுவிட்டேன். ( இதுபோன்றது தான் அண்மைய இலங்கையின் நிகழ்வு).
இந்த அவல நிகழ்ச்சி, கோபத்திற்கும் கொலைக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பைக் குறித்து இயேசுவின் போதனையை நமக்கு நினைப்பூட்டுகிறது. கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலை செய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாய் இருப்பான் என்பதும் பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்ருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். தன் சகோதரனை வீணனென்று சொல்கிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான். மூடனே என்று சொல்கிறவன் எரிநகரத்திற்கு ஏதுவாயிருப்பான். மத்தேயு 5: 21-22
அதாவது, கொலை போன்ற தீயநோக்கமுடைய கோபம் தேவனால் தண்டிக் கப்படும் என்று அவர் எச்சரித்தார். பின்பு மற்றவர்களுடன் நமக்கு இருக்கும் வெறுப்பின் காரணமாக உண்டாகும் கோபத்தை எடுத்தெறிவதற்கான நடைமுறை அறிவுரையை அதே அதிகாரம் வச. 23- 26 மூலம் நமக்க அறிவித்தார்.
ஆகையால் பலிபீடத்தினிடத்தில் உன்காணிக்கையைச் செலுத்தவந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறைவுண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கே தானே பலிபீடத்தின் முன் உன்காணிக்கையை வைத்துவிட்டுப்போய் முன்பு உன்சகோதரனிடத்தில் ஒப்பபுரவாகி பின்புவந்து உன்காணிக்கையைச் செலுத்து. ஏதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னை சேவகனிடத்திலும் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையிலும் வைக்கப் படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால் நீ ஒருகாசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்தில் இருந்து புறப்படமாட்டாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்.
நாம் அனைவரும் நமக்குள்ளிருக்கும் உள்ளான கடுங்கோபத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டும். நாம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால் நம்முடைய பகைமை உணர்வுகள் பலதடவைகளில் நம்மைக் கட்டுப் படுத்துவதனால் நாம் ஒருபோதும் செய்யக்கூடாது என்று நினைக்கும் காரியங்களை நாம் செய்து விடுகிறோம். நாம் நிதானத்தோடு சிந்திக்கிற நேரங்களில் அவற்றை நிச்சயமாக செய்யமாட்டோம் என்பதையும் நாம் அறிவோம். எனவே கட்டுப்படுத்த முடியாத கோபத்தை ஒருகுறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டைப்போல நாம் கருதவேண்டும். அது வெடிக்கும்போது நம்மையும் அழித்து விடுகிறது. நிவர்த்தி செய்;ய முடியாத தீங்கை மற்றவர்களுக்கு விளைவிக்கிறது. அனைத்து விதமான கோபமும் தவறென்றுகூறமுடியாது என்பது உண்மை. ஆனால் தவறான அனைத்து கோபத்தையும் நாம் ஒப்புக்கொண்டு, அது நம்மை கொலைக்கு வழிநடத்துவதற்கு முன் அதை அறிக்கை செய்ய வேண்டும்.
இன்னும் அதிகமாக விளங்கிக் கொள்ளும்படியாக காட்டுPன் படத்தில் நான் இரசித்ததை கூறவிரும்புகிறேன். கற்பாறைகளை வெடிபொருட்களால் தகர்க்கிற வேலையைச் செய்யும் ஒருநபர் தன்னுடைய நண்பனின் தோட்டத்தில் இருக்கும் மரத்தின் வேரை அப்புறப்படுத்த ஓர் வழியைப் கண்டுபிடித்தார். அவர் சில வெடிமருந்தை பயன்படுத்தத் தீர்மானித்தார். அதன்படி வெடிமருந்தை மரத்தின் அடியில் வைத்தார். அது வேரைத்தகர்த்து தூக்கி எறிந்தது. ஏறியப்பட்ட வேர் அருகில் இருக்கும் நண்பரின் வீட்டின்மேல் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது.
நாமும்கூட வெடிமருந்தைப் பயன்படுத்திய அந்த நபரைப்போல செயல்படுகிறோம். நாம் நம்முடைய பிரட்சனைகளைத் தீர்ப்பதற்கு வெடிபொருட்களையும், அதேபோன்ற வார்த்தைகளையும் பயன்படுத்துகிறோம். ஆனால் அவை அந்தப் பிரட்சனைகளை இன்னும் தீவிரமாக்குகின்றது. நாம் அந்தப் பிரட்சனையை தீர்ப்பதற்கு விறுவிறுப்பாக செயற்பட்டாலும், முடிவில் அது அதிக சேதத்தை உண்டாக்குகிறது.
இன்று கோபம் நம்முடைய பிரட்சனை மட்டுமல்ல. தேவனுடைய மக்களுக்கு அன்றும் ஓர் பிரட்சனையாக இருந்தது. மோசே தம்மைப் பின்பற்றுகிறவர்கள் முறு முறுப்பதைக் குறித்து கோபப்பட்டான். எண்ணாகமம் 20:10 எனவே மோசே கன்மலையிலிருந்து தண்ணீரைப் பெறுவதற்கு, தேவனுடைய கட்டளைப்படி கன்மலையிடம் பேசாமல், அதை கோபத்துடன் இரண்டுமுறை அடித்தான். (வச. 11). அப்போது தண்ணீர் வந்தது. ஆனால் அவன் தேவனுடைய கட்டளைக்கு கீழ்படியவில்லை. ஆகவே அவன் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் பிரவேசிக்க முடியாது என்று தேவன் கூறிவிட்டார்.
கோபம் ஓர் வெடிகுண்டைப் போன்றது. ஆதை ஞானத்தடனும், சுயகட்டுப் பாட்டுடனும் பயன்படுத்தப்படாவிட்டால், அதிக சேதத்தை உண்டாக்கும்.
நாம் சிந்திப்போம். சிறந்த முறையில் செயற்படுவோம்.
ஒருவருடைய கோபம் மேலோங்ககி நிற்கும்போது அவருடைய கீழானநிலை வெளிப் படுத்துகிறது.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro.Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark