01. சாக்கு போக்கு சொல்வதால் மனிதர்கள் தோல்வியடைகிறார்கள். உடல் நலம் சரியில்லை, வயது, அறிவு, அதிர்ஷ்டம் போன்ற தலைப்புக்களில் இதை அவிழ்த்து விடுகிறார்கள். அப்படி எதுவும் கிடையாது.. நமது மனம்தான் அதை உருவாக்குகிறது.
02. ஒரு நபர் தான் செய்ய விரும்புவதை செய்ய தவறுவதற்கும், பொறுப்புக்களை ஏற்கத்தவறுவதற்கும், வெற்றிபெற தவறுவதற்கும் உடல் நலம் சரியில்லை என்ற சாக்குப்போக்கு ஓராயிரம் தடவைகள் பயன்படுத்தப்படுகிறது.
03. உங்களுக்கு தெரிந்த வெற்றிகரமான மனிதர்களை கூர்ந்து பாருங்கள். உடல் நலக்குறைவை அவர்கள் ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தியிருக்கமாட்டார்கள் என்பதை கண்டறிவீர்கள்.
04. கச்சிதமான உடலைக்கொண்ட ஒருவர் கூட இந்த பூமியில் இல்லை என்று கூறப்படுகிறது. எல்லோருடைய உடலிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்யும் ஆனால் அதற்காக அதை சாக்கு போக்காக கூறக்கூடாது.
05. நீங்கள் ஒரு நோய் பற்றி கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் ஒரு நாள் அந்த நோய் உங்கள் வீட்டு வாசல்படி நோக்கி வந்துவிடும்.
06. ஓர் ஆண்டின் 365 நாட்களும் முழுமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஷின்ட்லர் ஒரு நூல் எழுதியுள்ளார். அதில் அவர் கூறும்போது மருத்துவ மனையில் இருக்கிற ஒவ்வொரு நான்கு பேருக்கும் ஒருவர் உணர்ச்சி நோயால் பிடிக்கப்பட்டே அங்கு வந்திருப்பதாக தெரிவிக்கிறார்.
07. அந்த மூவரும் தங்கள் உணர்ச்சியை கட்டுப்படுத்தியிருந்தால் வைத்தியசாலை வந்திருக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
08. நான் இறக்கும்வரை வாழப்போகிறேன் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
09. தனது கருமங்களை செய்ய விடாது நோய் தன்னை தடுக்க அனுமதிக்காத நபர்கள் வெற்றிகரமாக கருமங்களை முடிக்கிறார்கள்.
10. மனிதன் மரணத்தைப் பற்றி கவலைப்படுகிற ஒவ்வொரு நிமிடமும் ஒருவன் தன் வாழ்க்கையை இழந்துவிடுகிறான்.
11. நீரிழிவு நோய் என்பது ஓர் உடல் ரீதியான பிரச்சனை ஆனால் இந்த நோய் குறித்த ஓர் எதிர்மறையான மனப்போக்குத்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
12. சர்க்கரை வியாதி பற்றி நீங்கள் கவலைப்பட்டால் அதனால் உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.
13. நீரிழிவு நோய் பிடித்த ஒருவர் என்ன நடக்குமோ என்ற பயத்திலேயே வாழ்க்கையை தொலைத்துவிடுகிறார். சர்க்கரை வியாதி அவர் பிரச்சனையல்ல சாக்கு போக்கு சொல்ல அதை பயன்படுத்துகிறார். தப்பித்துக் கொள்ள அந்த வியாதியை பயன்படுத்துகிறார்.
14. நோய் என்பது அசௌகரியம்தான் அப்படிப்பார்த்தால் முகச்சவரம் செய்வது கூட அசௌகரியம்தானே..?
15. இன்சுலின் ஊசியை போடும்போது அதை கண்டு பிடித்தவரை பாராட்டுங்கள், ஊசி பயன்தரும்.
16. ஆரோக்கியம் பற்றிய சாக்குப் போக்குகளை மறந்துவிடுங்கள் : அதற்கு.. உங்கள் உடல் நலக்குறைவு பற்றி பேச மறுத்துவிடுங்கள். சாதாரண சளிக்காய்ச்சலைக்கூட பேச வேண்டாம்.
17. உங்கள் உடல் நலம் பற்றி பேசுவது மோசமான பழக்கமாகும், அது மற்றவருக்கு சலிப்பூட்டும். அது உங்களை சுயநலமானவராகவும் வயதானவராகவும் காட்டுகிறது.
18. வெற்றி சிந்தனை கொண்ட மக்கள் தங்களுடைய மோசமான உடல் நலம் பற்றி பேசுவதை இயல்பாகவே தவிர்த்துவிடுகின்றனர்.
19. உடல் நலமின்மை பற்றி பேசும் ஒருவர் மற்றவரிடமிருந்து நன் மதிப்பை விரைவாக இழந்துவிடுகிறார்கள்.
20. கால்கள் இல்லாத ஒருவனைப் பார்த்தபோது நான் மிதிவண்டி இல்லாத ஒருவன் என்ற கவலை மறந்து போனது.
21. துருப்பிடித்து தேய்வதைவிட உழைத்து உருக்குலைந்து தேய்வது நல்லதென உங்களுக்கு நீங்களே கூறிக்கொள்ளுங்கள்.
22. நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் கிடப்பதைப் போல கற்பனை செய்து வாழ்க்கையை விட்டுவிடாதீர்கள்.
23. நம் சொந்த மூளையின் சக்தியை நாமே மிகவும் குறைத்து மதிப்பிடுகிறோம்.
24. அடுத்தவருடைய மூளையின் சக்தியை நாம் அளவுக்கு அதிகமாக மதிக்கிறோம்.
25. இந்த உலகில் பிறந்த எந்த மனிதருமே தன் மூளையையும் ஆற்றலையும் 100 க்கு 100 வீதம் பரிபூரணமாக பயன்படுத்தவில்லை.
அலைகள் பழமொழிகள் 01.05.2019
மறந்துவிடாதீர்கள் இப்பழமொழிகள் நல்ல நூல்களை வாசித்து அதில் உள்ள நல்ல வரிகளை உங்களுக்கு தந்து நூல்களை வாசிக்க உங்களுக்கு நேரமில்லை என்ற சிக்கலை தீர்க்கிறது.
இந்த தொடர் 20 வருடங்களாக அலைகளில் மட்டும் வருகிறது மறந்துவிடாதீர்கள். படித்துவிட்டு அமைதியாகிவிடாதீர்கள் இப்படியொரு சமுதாயப்பணி நடப்பதை நான்கு பேருக்குக் கூறுங்கள். அதுவும் சமுதாய மேம்பாடே.