திருமணத்திற்கு ஓ.கே.சொன்ன நயன்தாரா கோபப்பட்ட ஓவியா..

திருமணம் எப்போது என்று தெரியாமலே நயன்தாராவுடன் காதல் வானில் பறந்துகொண்டிருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவன், நயனை நினைத்து உருகி உருகி காதல் கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்.விக்னேஷ் பொறுத்துக்கொண்டாலும் அவரது குடும்பத்தினர் பொறுமை கடந்துவிட்டனர். திருமணம் எப்போது என்று முடிவு செய்ய வேண்டும் என நயனிடம் கண்டிஷன்போட ஆரம்பித்தனர்.

இதில் ஷாக் ஆனார் நயன். இதனால் விக்னேஷ்-நயன் காதலில் விரிசல் விடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. ஆனால் நயன்தாரா தற்போது மனம் மாறியிருக்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன் சம்மதம் தெரிவித்திருக் கிறார். திருமணம் பற்றி பின்னர்தான் சொல்வாராம்.

நயனின் புதிய முடிவால் விக்னேஷ் சிவனும் அவரது குடும்பத்தினரும் ஹேப்பியோ ஹேப்பி. ஒவ்வொரு படத்துக்கும் ஒன்றரை முதல் 2 கோடி வரை சம்பளம் வாங்குவதுடன், ரஜினியுடன் தர்பார், சிரஞ்சீவியுடன் சே ரா என அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா. காதலனுடன் நிச்சயதார்த்தத்துக்கு பிறகு நயனின் மார்க்கெட் என்னவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
——–
கவர்ச்சி ஹீரோயினாக மாறி வரும் ஓவியா, நடிகர் ஆரவுடனான காதல் சர்ச்சையிலிருந்து மீளவில்லை. ஓவியா என்ன செய்தாலும் ஓவியா ஆர்மி ரசிகர்கள் பாராட்டி வந்த நிலையில் 90 எம்எல் படத்துக்கு பிறகு ஓவியா எது செய்தாலும் அதை நக்கலடிக்கும் குரூப்பும் உருவாகிவிட்டது. பாராட்டும் போது சிரிக்கும் ஓவியா சீண்டினால் பெண் சிங்கமாகி விடுகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு இணைய தளத்தில் ஓவியா பதில் அளித்தார். அப்போது ஒரு ரசிகர்,’என்னை திருமணம் செய்துகொள்ள தயாரா?’ என்றார்.

அதற்கு ஓவியா பதில் அளிப்பதற்கு முன்பாக குறுக்கே பாய்ந்த விஷமி ரசிகர் ஒருவர்,’ஐட்டத்தை கல்யாணம் செய்து என்ன பண்ணப்போறே..’ என்று கமென்ட் போட்டார். அதைப்பார்த்து கடுப்பான ஓவியா, ‘ஐட்டம் உங்கம்மா’ என்று பாம்பாக சீறினார். ஏடாகூடமாக விமர்சித்தவருக்கு ஓவியா ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

————-

Related posts