சந்தோசத்தை தெரிந்து கொள்ளுதல். (நமது கடமை)
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். சங்கீதம் 46:1
2012ம் ஆண்டு செப்டெம்பர் 11ம்திகதி லிபியாவில் அமெரிக்க தூதரகத்தில் கொல்லப்பட்ட தூதுவர் தனது நாட்குறிப்பில் எழுதியிருந்தது இன்றும் பலரின் வாழ்வில் தேவபாதுகாப்பு பற்றிய ஓர் சிந்தனையை மனுக்குலத்திற்கு வெளிப்படுத்து கிறது. உலக பாதுகாப்பு நிறைந்த கோட்டையில் இருப்பதைவிட தேவ பாதுகாப்பு நிறைந்த கொட்டிலில் இருப்பது அமைதியானது என்று. இதனை அவரது இறுதி ஆராதனையில் வாசித்து காட்டப்பட்டது. இந்த உண்மைமை அறிந்து உணர்ந்து கொள்வது என்பது மிகவும் கடினமானது. காரணம் தேவனைப்பற்றிய அறிவு இல்லையேல் இதனை அறியவோ உணரவோ முடியாது. அவர் உணர்ந்தபடியால் இதனை எழுதி வைத்திருந்தார்.
தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் ப10மி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது, அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், ப10மி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோ டிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.) ப10மியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் ப10மியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள், ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், ப10மியிலே உயர்ந்திருப்பேன். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கல மானவர். (சேலா.) சங்கீதம் 46.
கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுகிறோம். எவ்வளவு தூரம் நம்புகிறோம் என்பது ஒரு நெருக்கம் அல்லது ஒரு ஆபத்து வரும்போதுதான் தெரியும். தேவனை நம்பும்போது ஆபத்து நேரிடாது என்பது அல்ல. ஆபத்து வந்தாலும், நாம் தேவனை நம்பி அவரோடு இருந்தால், அவரும் நம்மோடு இருப்பார் என்பதுதான் அவரைக் குறித்து நமக்கிருக்கும் நம்பிக்கை.
நம்மில் பெரும்பாலானோர் கடின வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதில்லை. அதுவே நம்மைத் தெரிந்து கொள்கிறது. ஆனால் அதை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறோம் என்பதை நாமாகவேதெரிந்து கொள்ள முடியும். வேதனை என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் துயரப்படுவது நாமே தெரிந்து கொள்வதாகும் என்று ஒருவர் வேதனையுடன் பகிர்ந்து கொண்டார். என்றாலும் கஸ்டங்கள் வரும்போது பெரும்பாலும் துயரப்படுவதை நாம் தெரிந்து கொள்கிறோம்.
அதிக துன்பத்தினால் சரீரப்பிரகாரமாகவும், உணர்வுப10ர்வமாகவும் சோர்ந்து போயிருந்த ஓர் கிறீஸ்தவ நண்பரைப்பற்றி ஒருபிரபல எழுத்தாளர் குறிப்பிடும்போது, அவர் மனக்கிலேசத்தில் ஆழ்ந்திருந்தார். நீங்கள் எப்படி இருக்கிறீர் என அந்த எழுத்தாளர் கேட்டபோது, சந்தோசத்தை, அமைதியை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை சோகமாக பதில் அளித்தார். அது சரியே! சந்தோசம் அமைதி தெரிந்து கொள்ளும் ஒரு காரியமல்ல. அது ஒவ்வொரு மனிதனுடைய பொறுப்பாகும் என எழுத்தாளர் கூறினார்.
அதிர்ச்சியடைந்த நண்பர், என்ன சந்தோசம் என்பது ஒருகடமை என்பதுபோல பேசுகிறீர்களே, என்றார். அது சரி, என்று பதில் அளித்தார் அந்த எழுத்தாளர். நமது துயரங்களை மேற்கொண்டு சந்தோசமாக இருப்பதற்கு நாம் தேவனுக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம் என்று விளக்கினார் அந்த எழுத்தாளர். இதை உணர்த்த முடியாத சூழ்நிலையில் இன்று மதங்களும் மார்க்கங்களும் இருப்பது எவ்வளவு வேதனைக்குரியதாகும். வேதனையின் விளைவு அநியாய மரணங்கள்.
இந்த மாகபெரும் உண்மையை பவுல் அப்போஸ்தலன் ரோமர் 5ம் அதி. தெரியப் படுத்துகிறார். இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாகப்பட்டிருக்கிற படியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். அவர்மூலமாய் நாம் இந்த கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினானால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மை பாராட்டுகிறோம்.
அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, உபத்திரவங் களிலும் மேன்மை பாராட்டுகிறோம். மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேஅன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால் அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. (வச. 1-5)
இந்த சத்தியங்களை நினைவில் வையுங்கள். அப்போது சூழ்நிலை எப்படியிருந்தாலும் உங்களால் சந்தோசத்தை தெரிந்து கொள்ள முடியும்!
அன்பின் தேவனே, இன்று எனக்கு அடைக்கலமான ஓர் தேவன் ஒன்று உண்டு என்பதை கற்றுக்கொள்ள உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. எனது துன்ப துயர வேளைகளில் நான் உம்மீது என் கவனத்தை வைத்து, என் பிரட்சனையை கண்டுபிடித்து நீர் காட்டும் தூரநோக்கிலே அவற்றை அணுகும்படி உதவி செய்யும். என்னையும் எனது குடும்பத்தையும் உம்மைப்பற்றும் விசுவாசத்தில் வளர உமது கரத்தில் தருகிறேன். காத்து நடத்தி ஆண்டருளும்படியாக இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே, ஆமென்.
ஒரு கிறிஸ்தவனால் சந்தோசத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro, Francis T. Anthonypillai. Rehoboth Ministries Praying for Denmark