துணிச்சல் மிக்க பெண் என்று உலகத்தால் போற்றப்படும் நியூசிலாந்து நாட்டு பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டனுக்கும், அவருடைய நீண்ட கால காதலன் கிளாக் கேபோட்டுக்கும் திருமண நிச்சியதார்த்தம் நடந்துள்ளது.
இந்த செய்தி ஊடகங்களுக்கு பெரிதாக அறிவிக்கப்படவில்லை. ஜெசிந்தா ஆர்டனுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இவர் பதவியில் இருக்கும் போது இக்குழந்தையை பெற்றதும், அப் பெண் குழந்தையானது ஒரு பிரதமர் பதவிக்காலத்தில் பெற்ற பெண் என்று பெயர் பெற்றதும் தெரிந்ததே.
இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் குழந்தை பிறந்த பின் திருமணம் செய்யும் மரபு இருப்பதால், இவர்களுடைய பெண் குழந்தை பெற்றோரின் திருமணத்தை பார்க்கும் அரிய வாய்ப்பையும் பெறுகிறது.
அதுபோல தாய்லாந்து மன்னர் மகா வஜ்ராலங்கோன் தனது 66 வது வயதில் நான்காவது திருமணத்தை செய்துள்ளார்.
40 வயதுடைய முன்னாள் விமானப்படை ஜெனரலாக இருந்த சுதிடாவை திருமணம் செய்துள்ளார்.
இந்தப் பெண் மன்னரின் காலில் விழுந்து வணங்கி மண முடிக்கும் கூத்து பௌத்த பெண்ணடிமைத்தனத்தின் இன்னொரு வடிவமாக இருக்கிறது.
மன்னருக்கு பழைய மனைவிகள் வழியில் ஏழு பிள்ளைகள் உண்டு. இதுபோல 85 வயதான ஜப்பானிய மன்னர் பதவி விலகி தனது மகனிடம் ஆட்சியை வழங்கினார். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதாலோ என்னவோ மன்னர் உடல் தளர்ந்துவிட்டார்.
இருப்பினும் ஜப்பானிய வரலாற்றில் 200 வருடங்களுக்கு பின்னதாக ஒரு மன்னர் மரணிக்காமல் பதவி விலகுவது இதுதான் முதற் தடவையாகும்.
இப்படி இறப்பர் ஸ்டாம்பு மன்னர்களின் கூத்தாட்டங்கள் ஆசிய வட்டகையில் அலப்பாரை கிளப்பி வருகின்றன.
அலைகள் 03.05.2019