இந்தியாவில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

நோக்கியா 4.2 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 5.71 இன்ச் ஹெச்.டி. பிளஸ் வாட்டர்-டிராப் நாட்ச் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர், 3 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கிளாஸ் பேக் கொண்டிருக்கும் நோக்கியா 4.2 மாடலில் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், பவர் பட்டனில் நோட்டிஃபிகேஷன் லைட், பின்புறம் கைரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.

நோக்கியா 4.2 சிறப்பம்சங்கள்:

– 5.71 இன்ச் 1520×720 பிக்சல் 19:9 a-Si ஃபுல் வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
– அட்ரினோ 505 GPU
– 3 ஜி.பி. ரேம்
– 32 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, f/2.2, 1.12µm பிக்சல்
– 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, 1.12µm பிக்சல்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், மைக்ரோ யு.எஸ்.பி.
– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பின்க் சேன்ட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் நோக்கியா 4.2 விலை ரூ.10,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏழு நாட்களுக்கு பிரத்யேகமாகவும், அதன்பின் தேர்வு செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக சலுகைகள்:

– ஜூன் 10 ஆம் தேதிக்குள் நோக்கியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் நோக்கியா 4.2 வாங்குவோர் “LAUNCHOFFER” ப்ரோமோ கோட் பயன்படுத்தி ரூ.500 உடனடி தள்ளுபடி பெறலாம்

– சர்விஃபை வழங்கும் ரூ.3500 மதிப்புள்ள ஸ்கிரீன் ரீபிளேஸ்மென்ட் வசதி

– தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 10 சதவிகிதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது

– வோடபோன் மற்றும் ஐடியா சந்தாதாரர்களுக்கு ரூ.2500 உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை பெற ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

Related posts