சீனாவை சேர்ந்த பெண் ஒருவரின் முகத்தை ஆக்டோபஸ் உறிஞ்சி இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இணையத்தில் ‘seaside girl Little Seven’ என்ற பெயரில் பிரபலமாக திகழ்ந்து வரும் பெண், அடுத்த பதிவில் குறித்த உயிரினத்தை சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் ஆக்டோபஸை சாப்பிடுவது போல் முகத்தில் வைத்து வீடியோ பதிவு எடுக்க முயற்சித்துள்ளார்.
அப்போது அப்பெண்ணின் முகத்தில் ஒட்டிக்கொண்டது. முதலில் ஆக்டோபஸின் கால்களை எடுக்க முயலும் பெண், சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறார்.
இறுதியில் ஆக்டோபஸை முகத்திலிருந்து இழுத்து எடுத்த பெண், தனது முகத்திலிருந்து வரும் இரத்தத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் குறித்த காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், பெண்ணின் முகத்தை தனது கால்களால் பிடித்துக்கொண்ட ஆக்டோபஸ், மெதுவாக உறிஞ்சி இழுக்கும் காட்சி இடம்பெற்றிருந்தன.
இந்த வீடியோவை இணையத்தில் கண்ட பலர் பெண்ணிற்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.