இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் பற்றிய புதிய மாயைகளை ஏற்படுத்திய மிக அற்புதமான ஒரு படைப்பாளியும் தமிழ், மலையாளம் போன்ற நவீன இலக்கியம் தந்த மிகப்பெரும் சொத்து தோப்பில் முகம்மது மீரான். கதை சொல்லல் பாங்கு, புதிய மொழி, ஜாலங்களின் கட்டுடைப்பு என பல எழுத்துருவாக்க வித்தைகளை இலக்கியத்தில் தந்தவர்.
இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் என்பது மிக முக்கியமானது. ஒவ்வொரு படைப்பாளிகளும் தங்களது படைப்பின் புதுமைகளுக்கு ஏற்ப எழுத்துருவாக்கங்களை மேற் கொள்வர். அவ்வகை எழுத்துருவாக்கங்களே நவீன படைப்புகளுக்கு வித்திடுகின்ற கோட்பாடாக அமைந்து விடுகிறது.
யதார்த்தம் சார்ந்த படைப்புகள், புனைவுசார்ந்த படைப்புகள், ஆராய்ச்சி படைப்புகள் என அனைத்திலும் புதுமையான எழுத்துருவாக்கம் என்பது படைப்பின் காத்திரத்தன்மையினையும் பேசுபொருளையும் திறன்படச் செய்கிறது எனலாம். தோப்பில் முஹம்மது மீரான் இப்படிப்பட்ட கதைகளை சொன்னவர்தான்.
அண்மையில் எம்மை விட்டு அகால மரணமடைந்தார். இலக்கியங்களில் எழுத்துருவாக்கம் பற்றிய புதிய மாயைகளை ஏற்படுத்திய மிக அற்புதமான ஒரு படைப்பாளியும் தமிழ், மலையாளம் போன்ற நவீன இலக்கியம் தந்த மிகப்பெரும் சொத்து தோப்பில் முகம்மது மீரான். கதை சொல்லல் பாங்கு, புதிய மொழி, ஜாலங்களின் கட்டுடைப்பு என பல எழுத்துருவாக்க வித்தைகளை இலக்கியத்தில் தந்தவர்.
இவருடை எழுத்துக்களின் பாதிப்பில் பல்வேறு இலக்கிய ஜாம்பவான்கள் உருவாகியிருக்கிறார்கள். புதுமையான எழுத்துருவாக்கத்தின் தாக்கம தோப்பில் முகம்மது மீரான் இலக்கியங்களில் பெருத்த இருப்பின் அடையாளத்தினை பெற்றிருக்கிறது எனலாம். சாய்வு நாற்காலி, கிராமத்தின் கதை, அனந்த சயனம் காலணி போன்ற பல்வேறுபட்ட படைப்புக்களைத் தந்த தோப்பில் முஹம்மது மீரான் தேசிய விருது பெற்ற எழுத்தாளராவார். இன்றைய இலக்கியங்களின் போக்கு மிகவும் விரிந்த பரப்பாக இருக்கிறது.
முன்னொரு காலத்தில் நாங்கள் எழுதுகின்ற விடயங்களை நாங்களே வாசித்து இன்புற்றிருந்தோம். ஆனால் இன்று அப்படியில்லை. எமது எழுத்துக்களை வெளிநாட்டவர் வாசிக்கிறார்கள், வெளிநாட்டவரின் இலக்கியங்களை நாம் வாசிக்கிறோம்.
இதன் மூலமாக அவர்களின் பண்பாட்டையும், வாழ்க்கை முறையினையும், மொழி, கலாசாரம் என்பவற்றை அறிந்து கொள்கிறோம். அதே போல எமது எழுத்துக்களின் ஊடாக எமது கலாசாரக் கூறுகளை அவர்கள் அறிந்து கொள்வதற்கான அனைத்து வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இவ்வகையான இலக்கியங்களை தந்த தோப்பில் முஹம்மது மீரான் மறைந்தும் மறக்க முடியாம ஜீவனாவார்.