நவீன உலகில் அடிமைகளாக வாழும் 3 சகோதரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கூறும் இந்த நாவல், புகழ்பெற்ற சர்வதேச ‘மேன் புக்கர்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஜோகா அல்ஹரத்திக்கு விருதும், 50 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.44½ லட்சம்) பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இதன் மூலம் ‘மேன் புக்கர்’ விருதை பெற்ற முதல் அரபு மொழி எழுத்தாளர் என்ற பெருமையை ஜோகா அல்ஹரத்தி பெற்றுள்ளார்.
பரிசு தொகையில் பாதியை அந்த நாவலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த அமெரிக்காவை சேர்ந்த பேராசிரியருக்கு வழங்க உள்ளதாக ஜோகா அல்ஹரத்தி அறிவித்துள்ளார்.