முன்னரே வெளிவந்த கருத்துக்கணிப்புக்கள் பிழைக்கவில்லை பிரதமர் நரேந்திர மோடி அனைவரும் எதிர்பார்த்தபடி அமோக வெற்றி பெற்றார்.
இதுவரை வெளிவந்த முடிவுகள் காங்கிரஸ் மரண அடி வாங்கியதையே காட்டுகின்றன. ராகுல்காந்தி தமது மூதாதையரின் அமேதி தொகுதியிலேயே பின்னடைவு கண்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணி பெரு வெற்றி. பெற்றுள்ளது.. அதிமுக அணி பின்னடைவு கண்டது.. கமல், சீமானின் நாம் தமிழர், கிருஸ்ணசாமி போன்றோர் பின்னடைவு, அன்புமணி ராமதாஸ் 5000 வாக்குகளில் முன்னணி.
வெற்றி நிலவரம் – இந்தியா
கூட்டணி
பா.ஜ.க 538 / 343
காங்கிரஸ் 500 / 91
மற்றவை 340 / 85
மெகா 252 / 23
——
வெற்றி நிலவரம் – தமிழ்நாடு
கூட்டணி
தி.மு.க 39 / 36
அ.தி.மு.க 39 / 20
அ.ம.மு.க – 37 /
மற்றவை – 39 -7
நாடு முழுவதும் 294 தொகுதிகளில் பாஜக தனித்து முன்னிலை..
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக..
பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வாழ்த்து..
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கடிதம்..
பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகூ வாழ்த்து..
டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் பின்னடைவு.
வரும் 30 ஆம் தேதி ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி..
—
தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114; தி.மு.க.விற்கு 88; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு எட்டு, முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று, ஒரு சுயேட்சை என 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 22 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 12 தொகுதிகளிலும், மற்றும் அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட அனைத்து நிறுவனங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சராசரியாக முந்நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளன. இதனால், தமக்கே மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நம்பியுள்ளன. இதனால், எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தமுறை தன் கூட்டணிக் கட்சிகளை டெல்லிக்கு அழைத்து பாஜக விருந்து அளித்தது.
அதில் கலந்துகொள்ள வந்த தமிழகக் கட்சிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி வந்திருந்தனர். அப்போது முதல்வர் பழனிச்சாமி டெல்லியின் தமிழ்நாடு இல்லத்திலும், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் விருந்து நடைபெற்ற அசோகா ஓட்டலிலும் தங்கி இருந்தனர். இவர்கள், விருந்துக்கு இடையே பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் ஆட்சி கலைப்பு பற்றிய திட்டத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பாஜகவின் முக்கிய தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘அதிமுக மெஜாரிட்டி இழக்கும் நிலை ஏற்பட்டால் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை சந்திக்க அக்கட்சி தலைமை திட்டம் வகுத்துள்ளது. அதில், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அதே கூட்டணி களம் இறங்கும். இதில் பாஜகவிற்கும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அதிமுக அரசின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு மே மாதத்தோடு நிறைவடைகிறது.