எமது நாட்டிலிருந்து மத அடிப்படையிலான பயங்கரவாதத்தினை முற்றாக ஒழிக்கவேண்டும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சினால் சூரியவெவ நகரில் நிர்மாணிக்கப்பட்ட சந்தையினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
83 ஆம் ஆண்டின் கறுப்பு யூலையின் போது என்ன நடந்தது? அன்று தமிழர்களின் வியாபார நிலையங்கள், வீடுகள் மற்றும் வளங்கள் மற்றும் சொத்துக்கள் என்பனவற்றினை முற்றாக அழித்தார்கள். நாட்டில் ஒருசாராரின் இச் செயலினால் எல். ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகள் பலமடைந்தார்கள். ஒருநாளும் எல். ரீ. ரீ.ஈபயங்கரவாதிகளுடன் தொடர்புகளை வைத்திருக்காதவர்களும் அவர்களது இயக்கத்தில் இணைந்து தற்கொலைகுண்டுதாரிகளாக மாறினார்கள்.
இன்று நாம் மீண்டும் பூகோள பயங்கரவாதத்திற்கு முகம் கொடுத்துள்ளோம்.
நாம் கடந்த 83 ஆம் ஆண்டு கறுப்பு யூலை கலவரத்தினால் பாடங்களை கற்றுள்ளோம் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்வில் நகரஅபிவிருத்தி,மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக உட்பட பலர் கலந்து கொண்டார்.