மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ஆகியோர் தமது ஆளுனர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
———–
கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாசிகுடா பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சென்று சவுதி அராபிய நாட்டைச் சேர்ந்த சிலரை சந்தித்த சர்ச்சைக்குரிய சி.சி.ரி.வி காணொளி தற்போது வௌியாகியுள்ளது.
குறித்த சம்பவம் ஏப்பிரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களுக்கு மறுதினமான 22 திகதி இரவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் இடம்பெற்ற தினம் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இரவு நேரத்தில் குறித்த சவுதி அராபிய நாட்டவர்களை சந்திக்க கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அங்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
—–
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெற்று வருகிறது.
இந்த கலந்துரையாடலில் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலின் போது அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாவின் பதவிகள் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
————-
ஞாயிற்றுக்கிழமை 02
வடக்கில் பல பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் பல அபிவிருத்தித்திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் மயப்படுத்தப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்டார்.
கொழும்பிலிருந்து நேற்று (01) மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரதமர் தலைமையிலான அமைச்சர்கள் குழுவினருக்கு யாழ் கோட்டையில் வரவேற்பளிக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி வந்த பிரதமர் அங்கிருந்து ஹெலிகொப்டரில் யாழ் கோட்டையில் வந்து இறங்கினார்.
அவர்களை கல்வி இராஜாங்க அமைச்சர் விஐயகலா மகேஸ்வரன் யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வரவேற்றிருந்தனர்.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவை வழங்கும் நிகழ்வு யாழ் மாநகர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இக் கொடுப்பனவுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கி வைக்க உள்ளார்.
அதே போன்று வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஹெலன் தோட்டம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட வீடுகளையும் உத்தியோகபூர்வமாக பயனாளர்களிடம் கையளிக்கவுள்ளார்.