அடுத்த தேர்தலில் மைத்திரி போட்டியிடமாட்டார்..

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடன் உரையாடும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க் கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ அவரது ஆதரவை வழங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் இளமையான புதிய முகம் ஒன்று வந்தால், அவரை ஆதரிப்பதற்கு தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

————-

கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (05) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கிழக்கு மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (05) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஷான் விஜயலால் டி சில்வா, தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

——————

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டி போதனா வைத்தியசாலையிலிருந்து இன்று (05) வெளியேறியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீன், அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை அவர்களின் பதவிகளிலிருந்து விலகுமாறு கோரி, கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக கடந்த மே 31 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை கடந்த 4 நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கொண்டிருந்தார்.

குறித்த மூவரின் பதவி விலகலை அடுத்து உண்ணாவிரத்தை கடந்த 03 ஆம் திகதி கைவிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர், கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையிலேயே, அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இன்று வெளியேறியுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

—————-

Related posts