ஒரு மொழியில் ஹிட்டாகும் படம் மற்றொரு மொழியில் ரீமேக் ஆகிறது. நடிகை அனுஷ்காவின் கவனம் தற்போது உள்ளூர் மொழியிலிருந்து வெளி நாட்டு மொழிப் படம் மீது திரும்பியிருக்கிறது. உடல் எடை அதிகரித்ததால் கடந்த ஒரு வருடமாக புதிய படங்கள் ஒப்புக்கொள்ளாமலிருந்த அனுஷ்கா தற்போது ‘நிசப்தம்’ த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். ஹேம்நாத் மதுக்கர் இயக்கும் இதன் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகிறது. அடுத்தடுத்து புதிய படங்கள் ஒப்புக்கொள்ள முடிவு செய்திருக்கிறார் அனுஷ்கா.
அதற்காக நிறைய ஸ்கிரிப்ட் கேட்டு வருகிறார். இயக்குனர் ஒருவர் அனுஷ்காவிடம் ஸ்பேனிஷ் மொழி பட ஸ்கிரிப்ட் ஒன்றை சொல்லி இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக கூறினார். அது அனுஷ்காவை கவர்ந்தது. ஜூலியாஸ் ஐஸ் என்ற இப்படத்தில் நடிக்க அனுஷ்கா ஓ.கே சொல்லியிருக்கிறார். டபுள் ரோலில் அனுஷ்கா நடிக்கவுள்ள இப்படம் பழிவாங்கும் கதையாக உருவாகவிருக்கிறது.
————-
திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி நடித்த சூப்பர் டீலக்ஸ் படம், கடந்த மார்ச் மாதம் ரிலீசானது. தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இப்படம், விரைவில் இந்தியில் ரீமேக் ஆகிறது. இதை தியாகராஜன் குமாரராஜா இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவில் மோன்ட்ரல் நகரில் நடக்கும் சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
————-
தமிழ், தெலுங்கிலிருந்து இந்திக்கு போனார் டாப்ஸி. இந்தியில் பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் அவர் நுழைந்திருக்கிறார். ஏற்கனவே திருமண அலங்கார ஏற்பாடுகளை செய்து தரும் நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சில இயக்குனர்களின் அறிவுரை கேட்டு மும்பையில் ரியஸ் எஸ்டேட் தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அபார்ட்மென்ட்டில் சொந்த வீட்டில் அவர் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ரூ.6 கோடியில் மற்றொரு வீட்டை வாங்கியுள்ளார். மேலும் சில பிளாட்களையும் வாங்கியிருக்கிறாராம். நல்ல விலை வரும்போது இவற்றை விற்க அவர் முயற்சிப்பாராம். இதற்கிடையே தமிழ், தெலுங்கில் கேம் ஓவர் என்ற ஹாரர் கதை படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இந்தியில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய மொழி படங்களிலும் அவர் நடிக்க திட்டமிட்டுள்ளார்.