மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் பேசியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2009-ல் புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கிறது. 2009-ல் பதிவான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜூலை 5-ல் தீர்ப்பு வழங்குகிறது.