நேற்று நள்ளிரவு முதல் புகையிரத தொழிற்சங்கங்கள் சில இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தை அரம்பித்துள்ளன.
புகையிரத ஊழியர்களின் பணிப் புறக்கணிப்பால் சுமார் 45 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ரயில் சேவைகள் இன்றைய தினம் பணியில் ஈடுபட்டதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார்.
சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் புகையிரத பணியாளர்களது தொழிற்சங்க உறுப்பினர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நிதி அமைச்சருடன், புகையிரத தொழிற்சங்க பிரதிநிதிகள் நே்றுற பேச்சுவார்த்தை நடத்திய போதும், அது தோல்வியில் முடிந்ததையடுத்து வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.
அதன்படி புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் இணைந்து இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தை அரம்பித்துள்ளனர்.
—–
வெலிகம, கப்பரதோட்டை பிரதேசத்தில் வீதியில் இருந்த புத்தர் சிலை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 04.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தர் சிலை மீது இரண்டு கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இதுவரை இனங்காணப்படாத நிலையில், புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பில் இரு தரப்பினருக்கு இடையே நீண்ட காலமாக முரண்பாடு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
——
மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்திற்கு சவீகரித்துக் கொள்வதற்கு கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
அவசரகால சட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கல்வித் துறை சார்ந்த மேற்பார்வைக் குழு பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே மட்டக்களப்பு பல்கலைக்கழகம் சம்பந்தமாக குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.