முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார்.
இன்று காலை 10 மணியளவில் அங்கு ஆஜரான அவர் தற்போது வரை விசாரணைப் பிரிவில் இருப்பதாக செய்தியாளர் கூறுகிறார்.
இதேவேளை நேற்றைய தினம் திட்டமிட்ட குற்ற ஒழிப்பு பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
——
நச்சுத் தன்மையுடைய போதைப் பொருள் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு சம்பந்தமான குற்றச்சாட்டில் 9410 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மூன்று வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்த விஷேட சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைப்படி நாட்டில் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக போதைப் பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
——