ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையின் போதும் அவர் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டார். அதேபோன்று தான் தற்போதும் ஞானரத்ன தேரரின் உரை குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ளாமல் இதுகுறித்து பி.பி.சி நேர்காணலில் கருத்துரைத் திருக்கிறார். மதத்தலைவர்கள் என்ற அடிப்படையில் இவை தொடர்பில் நாங்கள் அதிகம் பேசுவது பொருத்தமாக இருக்காது என அஸ்கிரிய பீட அனுநாயக்கர் மதகம ஸ்ரீ தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திபெத்திய பௌத்த ஆன்மிகத் தலைவர் தலாய்லாமா பி.பி.சி செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரான வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் முஸ்லிம்கள் தொடர்பில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ‘முஸ்லிம்களின் கடைகள், வர்த்தக நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம். அந்தக் கடைகளில் உணவருந்த வேண்டாம். அவர்கள் எம்முடைய சமூகத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு செயற்படுகிறார்கள் என்பது வெளிப்பட்டிருக்கிறது.
ஆகையால் பௌத்தர்கள் கவனமாக பாதுகாப்புடன் செயற்பட வேண்டும். மேலும் கருக்கலைப்பு செய்த வைத்தியரை கல்லால் அடித்துக்கொல்ல வேண்டும் என தெரித்தனர். நான் அவ்வாறு கூறமாட்டேன், ஆனால் அதைத் தான் செய்ய வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
‘இன, மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித் திருக்கின்ற ஒருவர் இத்தகைய கருத்துக்களைக் கூறுவதென்பது முற்றிலும் தவறானதாகும். நாம் ஏனைய பிற சம்பிரதாயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். சமய நம்பிக்கைக்கும், கௌரவத்திற்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று தலாய்லாமா சுட்டிக்காட்டினார்.
ஞானரத்ன தேரரின் கருத்து குறித்தவொரு தருணத்தில் கூறப்பட்டதாகும். அந்த உரையின் ஆரம்பத்தில் அவர் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்பிலும், பசில் ராஜபக்ஷ குறித்தும் கூட கருத்துக்களை வெளியிட்டார். உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதல்கள் நாடளாவிய ரீதியில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. எனினும் அப்போது வாய் திறக்காதவர்கள், இப்போது ஞானரத்ன தேரரின் கருத்தின் ஒரு பகுதியை மாத்திரம் கவனத்திலெடுத்து, அதை பெரும் பிரச்சினையாக்குகின்றார்கள். இது தொடர்பில் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஜெனீவாவில் முறைப்பாடு செய்திருப்பதுடன், தேவையற்ற சர்ச்சைகளையும் உருவாக்குகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு.
எனவே அவர் வெளியிடுகின்ற கருத்துக்களும் பெரும்பாலும் மேற்குலக நாடுகளின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே அமைந்திருக்கின்றன. ரோஹிங்கிய முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினையின் போதும் அவர் பௌத்தர்களுக்கு எதிரான கருத்துக்களையே வெளியிட்டார். அதேபோன்று தான் தற்போதும் ஞானரத்ன தேரரின் உரை குறித்த முழு விபரங்களையும் அறிந்துகொள்ளாமல் இதுகுறித்து பி.பி.சி நேர்காணலில் கருத்துரைத்திருக்கிறார். மதத்தலைவர்கள் என்ற அடிப்படையில் இவை தொடர்பில் நாங்கள் அதிகம் பேசுவது பொருத்தமாக இருக்காது என்று கருதுகிறேன் என தம்மானந்த தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.