எங்களின் வாழ்வின் ஓட்டத்தின் முடிவு
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
புலம்பல் 3:57ல் சொல்கிறது, நான் உம்மை நோக்கிக்கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி, பயப்படாதே என்றீர். எமக்கு ஏற்படும் சந்தேகத்தால் அழிவு, இழப்பு, தோல்வி வரும்போது நாம் தேவனை நோக்கி கூப்பிடும்போது அவர் எங்களை அணுகி, எல்லாப் பயங்களையும் நீக்கி, எங்களை மீட்டு, ஆறுதலைத்தருவார்.
அன்று ஏவாளுக்கு வந்த சந்தேகம், இன்று முழுமனுக்குலத்தையும் பாவத்திற்குள் மூழ்கவைத்து, முழுமனுக்குலத்தையும் அழிவின் பாதைக்குள் இட்டுச்செல்வதைக் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இதை நாம் விளங்கிக்கொள்ள ஆதியாகமம் 2ம்,3ம் அதிகாரத்தை வாசிக்கவேண்டும். தேவன் அவர்களுக்கு இட்டகட்டளை,தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்;. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆனால் பிசாசானவன் அந்தக் கனியைக்குறித்து ஏவாளிடத்தில் சொல்லும்போது, அப்பொழுது சர்ப்பம் ஸ்திhPயை நோக்கி, நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப்புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதி.3:4-5
தேவனுடைய கட்டளைமேல் சந்தேகம் கொண்டு அந்தப்பழத்தை புசித்தார்கள். அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது. அதனால் தேவசந்நிதியை விட்டுஓடி ஒளிந்து கொண்டார்கள். வசனம் 8. காரணம் தேவனுடைய மகிமை என்கிறதான அலங்காரம், பாதுகாப்பு அவர்களை விட்டு விலகியதுடன் தாங்கள் நிர்வாணிகள் என்பதை உணர்ந்து ஒளிந்துகொள்ள வேண்டியநிலை ஏற்பட்டது. இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது தேவனுடைய வார்த்தையின்மேல் சந்தேகம் கொண்டால் நாமும் விலகிஒட வேண்டியதுதான் (அதாவது தேவபராமரிப்பை இழந்த வாழ்க்கை வாழவேண்டியதுதான்).
அன்று எப்படி பிசாசானவன் ஏவாளிடம் தேவனுடைய வார்த்தைமேல் சந்தேகம் கொள்ளும்படி செயற்பட்டானோ அதேபோல் இன்றும் செயற்படுகிறான். உதாரணமாக யாத்திராகமம் 20:3ல் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். இது தேவனின் கட்டளை. ஆனால் அந்த வார்த்தையின் மேல் உலகம் சந்தேகப்படுவதனால் இன்று கோடிக்கணக்கான தேவர்கள் நாளுக்கு நாள் உண்டாக்கப்பட்டு வருகிறதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதனால் மனித சமுதாயம் சீரளிக்கப்பட்டு வருவதோடு அல்லாமல், இயற்கையும் சீரளிக்கப்பட்டு முழுஉலகமும் அழிவை நோக்கிச் செல்வதை நாம் கண்டுணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
அன்று ஏதேனில் தேவபிரசன்னத்தோடு ஆரம்பமான இன்பமான மனிடவாழ்வு, தேவவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட சந்தேகத்தினால் சபிக்கப்பட்ட பூமியாகவும் மனித வாழ்வு சாபத்தை நோக்கியவாறு தொடரப்பட்டது. இன்றும் அதேவாழ்வு தொடரப்பட்டும் வருவது மிகவேதனைக்குரியது. இதை உணர்ந்த தேவன் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் மோசேயைக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்த மக்களை மீட்டெடுத்தார். 2019 வருடங்களுக்கு முன்னர் இயேசுகிறீஸ்துவை அனுப்பி மக்களை மீட்டெடுத்தார். இன்றும் மீட்டெடுத்துக்கொண்டும் உள்ளார்.
பிரியமானவர்களே, நமது வாழ்விலும் சந்தேகங்கள், மிகவும் அருமையான இனிமையான நம் வாழ்வை சீரளித்துவிடும் என்பதை ஒரு நாளும் மறவாதே. விசேடமாக பிசாசானவன் தேவவார்த்தையின்மேல் கொண்டுவரும் சந்தேகம் தேவனை விட்டு விலகுவதற்கு மட்டுமல்ல, முழுக்குடும்பத்தையும் சாபமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் என்பதை ஒருநாளும் மறவாதே. ஆகவே தேவனுடைய வார்த்தையை அறிய உங்களுக்குக் கிடைக்கும் சர்ந்தப்பத்தை உதாசீனம் பண்ணாமல், அதை அறிய முற்படு. அதினால் வரும் ஆசீர்வாதமான வாழ்க்கையை அடைந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழமுற்படு.
இந்த உண்மையை நீங்கள் அறிந்துகொள்ள லூக்கா16:19-31 வாசித்து தியானயுங்கள். இது ஒரு ஐசுவரியவானுக்கும் ஒரு ஏழை மனுஷனுக்கும் நடந்த கதை. இருவரும் வௌ;வேறுபட்ட வாழ்க்கை முறையுடன் ஓரே இடத்தில் வாழ்ந்து வந்தனர். ஒருவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும்தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரன் வறுமையில் வாழ்ந்து கொணடிருந்தான். இருவரும் மரித்தார்கள். இரு வரும் அடக்கம் பண்ணப்பட்டார்கள். ஆனால் தரித்திரன் தேவது}தரால் ஆபிரகாமு டைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான். ஐசுவரியவான் நரகத்திற்கு கொண்டு போகப்பட்டான்.
இது இயேசு கூறியகதை. ஏன் இந்த ஐசுவரிவான் நரகத்திற்குச் சென்றான்? இதுதான் இந்தக் கதையின் சாரம்சம். இந்த உலகத்தில் பணக்காரணாக வாழ்ந்தாலும் பரலோகம் போகமுடியாது. அதே நேரம் ஏழையாக வாழ்ந்தாலும் பரலோகம் போகமுடியாது. இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இருவரும் மரித்தார்கள். ஏழை, ஆபிரகாம் மடியில் தேவதூதர்களால் கொண்டு போய்விடப்பட்டான். பணக்காரன் அடக்கம் செய்யப்பட்டான். அக்கினிக்கடல் என்று சொல்லப்படும் நரகத்தில் இருந்து ஆபிரகாம் மடியில் இருக்கும் அந்த ஏழை மனிதனைக் கண்டான். தனது தாகத்தைத் தீர்ப்பதற்கு ஒருசில துளி தண்ணீர் கேட்டான். உதவிபெற முடியாதநிலை.
அது மட்டுமல்ல நரகத்திற்கும் பரலோகத்திற்கும் மிகப்பெரிய இடைவெளி. அதைவிட அவனின் வேதனை தனது ஐந்து சகோதரர்கள் பற்றியது. அவர்களும் இந்த இடத்திற்கு வந்து வேதனைபடப்போகிறார்களே என்று. காரணம் அவன் சம்பூரணமாக வாழ்ந்தபோது தேவ வார்த்தைக்கும், தேவ ஊழியக்காரருக்கும் செவி கொடாமல் சந்தேகத்துடன் வாழந்ததுதான். வசனம் 29-31. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான்.
அதற்கு அவன், அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப்போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன் அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரி லிருந்து ஒருவன் எழுந்து போனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். மோசே என்றால் தேவனுடையவார்த்தை. தீர்க்கதரிசிகள் என்றால் தேவனுடைய ஊழியக்காரர்கள். இயேசுகிறீஸ்துவை சொந்த இரட்சகராக, பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை கொடுத்து பரலோக வாழ்வுக்கான வழியைக் காட்டும் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள சந்தேகப்படும், மறுக்கும் மக்களின் முடிவைப்பற்றியதுதான் இதன் விளக்கம்.
எங்களின் வாழ்வின் ஓட்டத்தின்முடிவு எங்கேமுடியும் என்று சிந்திப்போம். …. இந்த எமது முடிவு பரலேகத்தை (நித்திய ஜீவனை, பாதுகாப்பான இடம்) நோக்கியதா? அல்லது நரகத்தை (அக்கினிக் கடலை) நோக்கியதா?; இயேசுகிறீஸ்த்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு ஏதுவாக தேவனை அறியவிரும்பும் மக்கள் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை அறிக்கை பண்ணுங்கள்.
அன்பின் இயேசு சுவாமி, இன்று உம்முடைய சத்தியம் எனது இருதயத்தின் கண்களை பிரகாசிக்கப் பண்ணியதற்காக உமக்கு கோடி நன்றிகள் அப்பா. பிசாசானவன் கொண்டுவரும் சகல சந்தேகங்களுக்குள் நான் அகப்பட்டு விழுந்து, நீர் எனக்கு வைத்திருக்கும் இனிய வாழ்வை கெடுத்துப்;போகாதபடி உமது கிருபையால் என்னைத்தாங்கி வழிநடத்தும். எது அவசியம் என்று தெரியாமல் இது வரை வாழ்ந்துவிட்டேன். இன்று முதல் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்வதே உத்தமம் என்றெண்ணிவாழ என்னை முற்றுமுழமையாக ஒப்புக்கொடுக்கிறேன். என்னைக்காத்து வழிநடத்தும் பிதாவே, ஆமேன்.
கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.