டென்மார்க் ஸ்கீவ நகரத்தில் இன்று சனி முற்பகல் இடம் பெற்ற கார் விபத்தில் 54 வயது நபர் ஒருவர் பரிதாப மரணமடைந்தார்.
கார் ஒன்றை முந்த முற்பட்டபோது இரண்டு கார்களும் மோதிக்கொண்டன. காரை முந்திய 54 வயது நபர் ஸ்டியரிங்கை தளம்ப விட்டதால் விபத்து நேர்ந்துள்ளது.
ஸ்கீவ வழியில் கொய்ரிங் நகர மேற்கு பகுதியில் விபத்து இடம் பெற்றது. மேலதிகமாக யாராவது காயமடைந்த தகவல் இல்லை என்கிறது போலீஸ்.
இதே போல இன்னொரு விபத்தில் நேற்றிரவு 30 வயது இளைஞர் ஒருவர் மரணமடைந்தார். வீதியோரமாக சென்று கொண்டிருந்த இவர் மீது வாகனம் ஒன்று மோதியது. அவ்வளவுதானா மோதிய வாகனம் நிற்காமலே சென்றும்விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் கோவ வை, ஸ்ரெவன்; என்ற இடத்தில் நடந்துள்ளது. பின்னால் வந்த கார் சாரதி அடிபட்டவரை மீட்டு, பின் போலீசிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
காரால் அடித்தவர் போதை, அல்லது மது போன்ற லாகிரி வஸ்துக்கள் பாவித்துள்ளாரா என்று பரிசோதிக்கப்பட்டது. அவர் போதையில் இல்லாமையால் விடுவிக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது. காட்டு விலங்கு ஏதோ அடிபட்டதாகவே தான் நினைத்து காரை ஓடிச்சென்றதாக சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இன்றைய டென்மார்க் செய்திகளில் மேலும்..
மருத்துவ பற்று சீட்டு பெற்று மருந்து கடைகளில் சட்டப்படி கஞ்சா மருந்தை வாங்குவோர் தொகை ஓராண்டு காலத்தில் 300 வீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2019ம் ஆண்டு முற்பகுதியில் 1.765 பற்று சீட்டுக்கள் கஞ்சாவிற்காக எழுதப்பட்டுள்ளன. இது முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிட்டால் பெரும் உயர்வாகும்.
ஸ்கலரோச என்னும் மூளை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மரபு ரீதியான மருந்து மாத்திரைகள் போதிய பயன் தராத காரணத்தால் இந்த மருந்து மாற்றாக வழங்கப்படுவதாதக வியாக்கியானம் கூறப்படுகிறது.
ஆனால் இது உண்மையல்ல என்று மருத்துவ துறை பேராசிரியர் ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார். கஞ்சா இலையில் உருவாக்கப்படும் போதையினால் நோய்கள் குணப்படுவதற்காக ஆதாரங்கள் எதுவும் இல்லை என்கிறார் அவர்.
அலைகள் 13.07.2019