பிக்பாஸில் கமல் பிசியாக உள்ளதால் வேலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிலளித்தார்.
சென்னை ராயபுரத்தில் உள்ள புனித அன்னாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.
மாணவிகள் மத்தியில் தாவரவியல் குறித்து கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், பதிலளித்த மாணவிகளுக்கு 500 ரூபாய் பரிசளித்தார். புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, மாணவர்களிடையே சுவாரசியமாக பேசி மரங்களை வளர்க்க அறிவுறுத்தினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-
பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் கருவியில் இந்தி என்ற குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர் இந்தியை எந்த வழியிலும் அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் கருவியில் இந்தி இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக மொழியை வைத்து வியாபாரம் செய்கிறது “புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்து பற்றி பதிலளித்த அவர் ஜனநாயக நாட்டில் சூர்யாவிற்கு கருத்து கூற உரிமையுள்ளது. பிக்பாஸில் கமல் பிசியாக இருப்பதால் வேலூரில் போட்டியிடவில்லை என்று கூறினார்.