மனிதன் நிலவுக்கு செல்கிறான், ‘இந்த முறை, அங்கேயே தங்குகிறான் என்று நாசா ட்வீட் செய்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்வெளி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இஸ்ரோ ‘சந்திராயன்-1’ என்ற விண்கலத்தை தயாரித்து கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. இதன் மூலம் நிலவின் மேற்பரப்பில் நீர் மூலக்கூறுகளை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகளை செய்து முக்கிய பங்கு வகித்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சந்திரயான் 2 விண்கலம், ஜூலை 15 ஆம் தேதி அதிகாலை 2.51 மணிக்கு ஏவப்பட இருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 56 நிமிடங்களுக்கு முன்னதாக அதிகாலை 1.55 மணிக்கு, சந்திரயான் 2 விண்கலம், விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டு, வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சந்திரயான் -2 ஜூலை 22 ஆம் தேதி பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் நாசா ஈடுபட்டு வருகிறது.இந்த முறை விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நாசா திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டத்திற்கு தனியார் நிறுவனங்களை நாட உள்ளது.
நிலவின் சுற்றுப்பாதையில் ஆழ்ந்த வெளி நுழைவு வாயிலை அமைக்கும் திட்டத்தை நாசா முன்னெடுத்து வருகிறது. செவ்வாய் கிரகம் உள்பட ஆழமான விண்வெளி இலக்குகளை அடைய அங்கு விண்வெளி மையத்தை கட்டும் சவாலான பணிகளுக்கான தேவையான அமைப்புகளை சோதனை செய்ய விண்வெளி வீரர்கள் தொடங்கி உள்ளனர்.
நிலவுக்கு அருகில் உள்ள விண்வெளி பகுதியானது மனித ஆற்றலுக்கான அனுபவத்தை பெறுவதற்காக ஒரு உண்மையான ஆழமான சூழலை வழங்குகிறது.
நிலவில் நீண்ட காலம் தங்குவதற்கு தயாராகி வருகிறது. இந்த தங்குமிடம் செவ்வாய் கிரகத்திற்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களுக்கான நிறுத்துமிடமாக அல்லது வழி நிலையமாகவும் செயல்படும்.
இது குறித்து நாசா வெளியிட்டு உள்ள ஒரு ட்விட்டில்
“நாங்கள் நிலவுக்கு போகிறோம் – இந்த சமயம் அங்கே தங்குகிறோம் என கூறி உள்ளது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பணிபுரியும் நாசா ஸ்பேஸ் சூட் பொறியாளர் லிண்ட்சே அட்சீசன் கேள்வி பதில் அமர்வின் இணைப்பைப் பகிர்ந்துள்ளார்.