இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதியும் ,பிரதமர் அமைச்சரவையுமே முழுப்பொறுப்பையும் ஏற்றுகொள்ள வேண்டும்.
தாக்குதல் குற்றவாளிகளை கண்டறிவதை விடுத்து ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அரசாங்கம் ஆராய்ந்துகொண்டுள்ளது. அரசாங்கம் ஆரந்துகொண்டுள்ள தருணத்தில் எமது பொது வேட்பாளரை களமிறக்கி ஆட்சியை கைப்பற்றிக் காட்டுகின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர் சுசில் பிரேமஜெயந்த சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நிருவாக மாவட்ட சட்டத்தின் கீழான தீர்மானங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சொல்லிவைத்து நடத்திய தாக்குதலாகும். தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி கால அவகாசம் கொடுத்து தாக்குதல் நடத்தியும் அதனை தடுக்க முடியாத அரசாங்கமே ஆட்சியில் உள்ளனர்.
இந்த தாக்குதல் குறித்து முழுப்பொறுப்பையும் பிரதமரும், அமைச்சரவையும் தான் ஏற்றுகொள்ள வேண்டும். அமைச்சரவை தலைவர் ஜனாதிபதியும் குற்றவாளி என்பதே எமது நிலைப்பாடு என எதிர்கட்சி உறுப்பினர் தெரிவித்துள்ளார்.