வைகோ எம்பி : எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி மாநிலங்களவையில் பேசும்போது கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும். மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும்.

மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறார்கள். தமிழகத்தில் 6 மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. எதிர்ப்பை மீறி செயல்படுத்தினால் காவிரி வடிநில மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும்.

தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை 10 ஆயிரம் அடி ஆழத்துக்கு செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எந்த எதிர்ப்பு வந்தாலும் இந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி உள்ளார். மக்கள் எதிர்ப்பை மீறி செயல்படுத்த முயன்றால், மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என்று வைகோ பேசினார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசக் கூடாது என வைகோவுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அறிவுறுத்தினார்.

Related posts