உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபாநாயகர் கருஜயசூரிய, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு அக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்தன, ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க போட்டியிட வேண்டும் என கட்சிக்குள் ஒரு தரப்பினரும், கருஜயசூரிய மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் போட்டியிட வேண்டும் என மேலும் இரு தரப்பினரும் வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவர்கள் மூவருள் ஒருவர் உத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.