என்னைக் கொலை செய்ய ரூபா 25 மில்லியன் ஒப்பந்தம்

அடுத்த ஆட்சியில் தமிழ்த் தலைவர்கள் தேசிய அரசியலில் பங்கேற்க வேண்டும்” நாட்டில் எந்த வகையான அரசாங்கங்கள் அமைய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கிறார்கள். ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றாலும் அரசியல் நெருக்கடிகள் உருவானாலும் நிலையான தேசிய கொள்கை காணப்படுமாயின் அது நாட்டுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாது என வீர­கே­ச­ரி வார வெளியீட்டுக்கு வழங்­கிய விசேட செவ்வியில் சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு : கேள்வி:- நீங்கள் இரா­ணு­வத்தில் பணி­யாற்­றிய காலத்தில் வடக்கில் சேவை­யாற்­றிய அனு­ப­வங்­களை பகிர்ந்து கொள்ள முடி­யுமா? பதில்:- 1965ஆம் ஆண்டு முதல் 1972வரை­யி­லான காலப்­ப­கு­தியில் இரா­ணு­வத்தில் இருந்­த­போது, நான் பூந­கரி மற்றும் இயக்­கச்சி இரா­ணுவ முகாம்­களில் பணி­யா­றி­யி­ருந்தேன். அக்­கா­லத்தில் யுத்தம் இருக்­க­வில்லை. பூந­கரி முகாம் சிறி­ய­வொரு தக­ரக்­கொட்­டி­லா­கவே இருந்­தது. நாட்டின் மொத்த இரா­ணுவ எண்­ணிக்­கையும் 8ஆயி­ர­மா­கவே இருந்­தது. இக்­கா­லத்தில் வெளி­யாரின் அத்­து­மீ­றல்­க­ளையும் கடத்­தல்­க­ளையும்…