இந்திய வம்சாவளி மலையக சமூகத்தின் முதல் பேராசிரியர் என்ற பெருமைக்குரிய பொருளியல் பேராசிரியர் மு.சின்னத்தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் காலமானார். கண்டி மாவட்டம் ரங்கல எனும் பிரதேசத்தில் முத்துசாமி –முத்துவடிவு தம்பதிகளுக்கு பிறந்த இவர், அங்குள்ள தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைத் தொடர்ந்தார். இவரது தந்தை தோட்ட வெளிக்கள உத்தியோகத்தராவார். 1948 ஆம் ஆண்டு இவரது குடும்பம் தலவாக்கலை கல்கந்த எனும் பிரதேசத்துக்கு இடம்பெயர்ந்தது. பின்னர் தலவாக்கலை அரச சிரேஷ்ட பாடசாலையில் சாதாரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்லிப்பளை மகஜனா கல்லூரியில் உயர்தரம் பயின்று 1961 இல் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி பொருளியலை விசேட பாடமாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரிவுரையாளராகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு வருடங்களில் நிரந்தர விரிவுரையாளராகி பின்பு 1969 இல் இங்கிலாந்தின் மன்செஸ்டர்…