பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் சிறைத் தண்டனைக்கு அப்பால் தண்டிக்கப்பட வேண்டும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாறை, அரந்தலாவ பகுதியில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், நவீன உலகில் பயங்கரவாதம் என்பது எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம் போன்றதல்ல. நவீன உலகில் பயங்கரவாதத்தை நாம் அனைவரும 21 ஆம் திகதி கண்டோம். தனி ஒருவரால் செயற்படுத்தக் கூடிய பயங்கரவாதம்.
அதனால் நாட்டில் உள்ள அனைவரும் தேசிய பாதுகாப்பிற்காக ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் புலனாய்வு பிரிவின் உதவியுடன் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.