01. ஓர் எதிர்மறை எண்ணத்தை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதன் மூலம் அதை வளரவிட்டால் அது ஓர் உண்மையான மன அரக்கனாக வளரும். அது நம்முடைய கனவுகளை சிதைத்து தீவிர உளவியல் சிக்கல்களுக்குள் தள்ளிவிடும்.
02. கடந்த காலத்தில் இருட்டை மட்டுமே பார்த்திருந்தால் நிகழ் காலத்திலும் அதையே காண்பீர்கள். இதனால் வாழ்க்கை முழுவதும் அவ நம்பிக்கையே தொடரும்.
03. உங்களுடைய மனம் ஒரு வங்கியை போன்றது, அது எதிர்மறையான எண்ணங்களை எண்ணத் தொடங்கினால் ஆபத்தில் மாட்டிவிடும். ஆகவே அதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
04. ஒருவருக்கு உளவியல் பிரச்சனை இருந்தால் எதிர் மறையான எண்ணங்களை நிறுத்தி நேர்மறையான எண்ணங்களை எண்ணினால் சுகமடைய முடியும்.
05. உங்கள் மன வங்கியில் இருந்து இனிமையற்ற எண்ணங்களை நினைவுகூருவதை நிறுத்திவிடுங்கள்.
06. எதை மனதின் வழி பார்த்தாலும் மோசமான பக்கங்களை பார்க்க வேண்டாம். நேர்மறையாக சிந்தியுங்கள்.
07. இனிமையற்ற நினைவுகளை உங்கள் மனதில் இருந்து அகற்றிவிடுங்கள்.
08. அடுத்தவனும் அடிப்படையில் என்னைப் போன்றவன் என்றால் அடிப்படையில் அவனைக்கண்டு நான் பயப்பட எதுவும் இல்லை.
09. மக்களை கையாளும்போது பின்வரும் விடயங்களை மனதில் வையுங்கள் 1. மற்றவனும் முக்கியமானவனே 2. அதுபோல நீங்களும் முக்கியமானவரே.
10. உங்களை குறை கூறுகின்ற மக்களை நீங்கள் எதிர்கொள்ள தயாராகாவிட்டால், பயந்து ஒதுங்கினால் அவர்களால் உங்கள் நம்பிக்கையை சீர்குலைக்க முடியும். நீங்கள் தோற்கடிக்கப்பட்டுவிட்டது போன்ற உணர்வை அவர்களால் ஏற்படுத்த முடியும்.
11. கோபப்படுவோர் எல்லாம் தீயவர்கள் அல்ல பெரும்பாலான மக்கள் நல்லவர்கள்தான் என்பதை புரிந்து நடவுங்கள்.
12. அடுத்தவர் தனது கோபத்தை கொட்டி தீர்க்க இடமளித்துவிட்டு பின் அதை அப்படியே மறந்துவிடுங்கள்.
13. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எது சரி எது பிழை என்பது மத ரீதியான, அல்லது அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் இருந்து அணுகப்படுகிறது. இது மிகவும் தவறான விடயமாகும். நீங்களாவது அதை தவிருங்கள்.
14. பெரும்பாலான குற்றவாளிகள் தங்களை பற்றிய அளவுக்கு அதிகமான பிரக்ஞையோடு நடந்து கொள்வதுதான், அவர்கள் பிடிபடுவதற்கான காரணமாகும்.
15. எது சரியோ அதை மட்டும் செய்வது உங்கள் மனச்சாட்சியை திருப்தியாக வைத்திருக்க உதவும். தவறாக நடப்பது இரண்டு ஆபத்துக்களை ஏற்படுத்தும் 01. அது மற்றவர்களுக்கு தெரியவரும். 02. நீங்களே குற்ற உணர்வு கொண்டு தன்னம்பிக்கை இழப்பீர்கள்.
16. எனவே சரியான காரியங்களை மட்டும் செய்து உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். வெற்றிக்கு இட்டு செல்லும் வழி இது.
17. நீங்கள் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் விரைவில் அவற்றை ஒத்த நடவடிக்கைகளை உணர தொடங்குவீர்கள்.
18. இருவர் ஒருவர் மீது மற்றவர் அன்பை பொழியும் போது அன்புணர்ச்சி மெல்ல மெல்ல வளர ஆரம்பிக்கும்.
19. நீங்கள் பொய்யாக சிரித்தால் கூட அது ஒரு கட்டத்தில் மெய்யாக மாறிவிடும். கோபமும் அப்படித்தான்.
20. நீங்கள் தன்னம்பிக்கையுடன் சிந்திக்க விரும்பினால் தன்னம்பிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
21. நீங்கள் எத்தகைய உணர்வை அனுபவிக்க விரும்புகிறீர்களோ அதற்கு ஏற்றால் போல நடந்து கொள்ளுங்கள்.
22. வெற்றியில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை கவனத்தில் கொள்ளுங்கள்.
23. மற்றவர் கண்களை நேருக்கு நேர் பார்த்து பேச பழகிக்கொள்ளுங்கள்.
24. நிமிர்ந்து நில்லுங்கள், கூனல் போட்டு நடக்க வேண்டாம், வேகமாக நடக்க பழகுங்கள்.
25. தன்னம்பிக்கையை அதிகரிக்க வேண்டுமா 25 வீதம் வேகமாக நடவுங்கள்.
அலைகள் வாராந்த பழமொழிகள் 04.08.2019
தொடர்ந்தும் வரும்..