ஜெயலலிதா வாழ்க்கை விரைவில் படமாகும் -நித்யா மேனன்

ஜெயலலிதாவின் வாழ்க்கை படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று நித்யாமேனன் அறிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை ‘த அயர்ன் லேடி’ என்ற பெயரில் பிரியதர்ஷினியும், ‘தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய்யும் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் இயக்குனர் கவுதம் மேனனும் ஜெயலலிதா வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கிறார்.

‘த அயர்ன் லேடி’யில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனனும், தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடிக்கின்றனர். இருவரும் ஜெயலலிதா தோற்றத்துக்கு தங்களை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த படத்துக்காக கங்கனா ரணாவத் தமிழ் கற்று வருகிறார். நடை உடை பாவனைகளை மாற்றும் பயிற்சியும் எடுக்கிறார்.

‘த அயர்ன் லேடி’ பட அறிவிப்பை பல மாதங்களுக்கு முன்பே வெளியிட்டனர். ஆனால் படப்பிடிப்பை இன்னும் தொடங்கவில்லை. இதனால் படம் கைவிடப்பட்டு விட்டதா? என்ற பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் நித்யாமேனன் விரைவில் ஜெயலலிதா வாழ்க்கை படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜெயலலிதா வாழ்க்கை கதையான த அயர்ன் லேடி பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் பிரியதர்ஷினி உறுதியாக இருக்கிறார். எந்த சமரசமும் இருக்கக்கூடாது என்பதிலும் படக்குழுவினர் தெளிவாக உள்ளனர். படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன. படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்” என்றார்.

Related posts