சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷிற்கு

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது.

2018 – 66 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன அதன் விவரம் வருமாறு:

* சிறந்த தமிழ் படம் பிரியா கிருஷ்ண மூர்த்தி இயக்கிய பாரம்

* சிறந்த தெலுங்கு படமாக கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி தேர்வு

* சர்ஜிக்கல் தாக்குதலை மையமாக வைத்து எடுத்த உரி படத்திற்கு சிறந்த பின்னணி இசையமைப்பிற்கான விருது

* சிறந்த இந்தி படமாக ஸ்ரீராம் ராகவன் இயக்கிய அந்தாதூன் தேர்ந்து எடுக்கப்பட்டது.

* பத்மாவத் திரைப்படத்திற்காக சஞ்சய் லீலா பன்சாலிக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது.

* சிறந்த துணை நடிகைக்கான விருது ‘பாதாய் ஹோ’ படத்தில் நடித்த சுரேகா சிக்ரி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

* சிறந்த பின்னணி பாடகர்- அரிஜித் சிங் -பத்மாவத் படம்

* சிறந்த பின்னணி பாடகி -பிந்து மாலினி ( கன்னட படம் நிதிசராமி)

* சிறந்த ஒலி கலவை: தெலுங்கு படம் ரங்கஸ்தலம்

* சிறந்த சண்டை இயக்கம், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்-க்கான தேசிய விருது ’கே.ஜி.எஃப்’ திரைப்படத்திற்கு அறிவிப்பு..

* சிறந்த நடிகர்களுக்கான விருது ஆயுஷ்மான் குரானா (அந்தாதூன்) விக்கி கவுசல் ( உரி)

* சிறந்த நடிகைக்கான தேசிய விருது நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான மகாநடியில் நடித்ததற்காக ’கீர்த்தி சுரேஷிற்கு’ வழங்கப்பட்டுள்ளது

* சிறந்த நடனத்திற்கான விருது பத்மாவத் படத்தில் வரும் கூமர் பாடலுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

* தேசிய விருது சிறப்பு ஜூரி விருது ஜோஜு ஜார்ஜ் (ஜோசப்) மற்றும் சாவித்ரி சசிதரன் (சூடானி பிரம் நைஜிரியா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது

* சிறந்த திரைப்படத்திற்கான விருது ஹெலாரோவுக்கு (குஜராத்தி) செல்கிறது

* தேசிய ஒருங்கிணைப்பு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது ஒண்டல்லா எரடல்லா (கன்னடம்)

* சிறந்த அறிவியல் தொழில்நுட்ப படத்திற்கான தேசிய விருது ‘ஜி.டி.நாயுடு – தி எடிசன் ஆப் இந்தியா’ என்ற படத்திற்கு அறிவிப்பு

* திரைப்படம் எடுக்க உகந்த மாநிலம் உத்தராகண்ட் மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

* சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் ஏடபிள்யூஇ (தெலுங்கு) க்கான ஸ்ருஷ்டி கிரியேட்டிவ் ஸ்டுடியோ மற்றும் கேஜிஎஃப் (கன்னடம்) க்கான யுனிஃபை மீடியா

Related posts