லடாக்கில் தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சொந்தமான போர் விமானங்கள் வட்டமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை நீக்குவதாக மத்திய அரசு அறிவித்தது மட்டுமில்லாமல் ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தான் இந்தியாவுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. எந்தவிதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதரக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இந்திய ரேடாரில் இந்த அத்துமீறல் கண்டுபிடிக்கப்பட்டது. லடாக் எல்லையில் எப்போதும் பாகிஸ்தானை விட சீனாதான் அதிகம் அத்துமீறும். ஆனால் இந்தமுறை பாகிஸ்தானின் விமானங்கள் அங்கு அத்துமீறி வருகின்றன. கடந்த வாரம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சீனாவில் ஆலோசனை செய்த பின்னர் இந்த அத்துமீறல் நிகழ்ந்து உள்ளது.
இதனால் இந்திய விமானப்படை அதிகாரிகள் லடாக்கிற்கு விரைந்துள்ளனர். அதேபோல் அவசரகால போர்விமானங்கள் அங்கு களமிறக்கப்பட்டு உள்ளன. இதனால் தற்போது இந்தியா, காஷ்மீர் எல்லையில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.