நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3வது முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார். முன்னதாக விழாவில் நடைபெற்ற காவல்துறை, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். சென்னையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதல்வர் பழனிசாமி உரையாற்றி நிகழ்த்தினார். பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கினார்.
*அப்துல்கலாம் பெயரிலான விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு மற்றொரு நாளில் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தன்று விருது பெற இஸ்ரோ சிவன் வராததால், வேறொரு நாளில் விருது வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
*துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை கடலூர் மீன்வளத்துறை துணை இயக்குனர் ரம்யாலட்சுமிக்கு வழங்கப்பட்டது.
*அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருதை, நெல்லையில் கொள்ளையர்களை துணிவுடன் விரட்டியடித்த சண்முகவேல் – செந்தாமரை தம்பதியினருக்கு வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி.
*சிறந்த உள்ளாட்சி அமைப்புக்கான பிரிவில் சேலத்திற்கு சிறந்த மாநகராட்சி விருது வழங்கப்பட்டது.
*உள்ளாட்சி அமைப்புகளில் சிறந்த நகராட்சியாக தருமபுரி முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தை வேதாரண்யம் நகராட்சியும், 3ம் இடத்தை அறந்தாங்கி நகராட்சியும் பெற்றுள்ளது.
*அதேபோல, சிறந்த பேரூராட்சிகளில் மதுரை டி.கல்லுப்பட்டி, திருவாரூர் நல்லினம், ஈரோடு பவானிசாகர் ஆகியவைக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
*முதலமைச்சரின் நல் ஆளுமை விருது
1. பெருநகர சென்னை காவல் ஆணையரகம், குற்றங்களை கண்டுபிடிக்க சென்னை பெருநகர காவல்துறையின் மூன்றாவது கண் மற்றும் Facetager செயலி ஆகியவற்றை செயல்பாட்டிற்கு கொண்டுவந்ததற்க்காக வழங்கப்பட்டது.
2. வேலூர் மாவட்டத்தில் நாகநதி ஆற்றிற்கு புத்துயிர் அளித்தமைக்காக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறைக்கு வழங்கப்பட்டது.
3. வணிகவரித்துறை வரி செலுத்துபவர்கள் ஜிஎஸ்டி முறைக்கு புலம் பெறுவது குறித்த தகவல்களை வழங்குவது புதிய பதிவு எண் குறித்த விவரங்கள் அளிப்பது, இதற்காக புதிய அழைப்பேசியை உருவாக்கி 24மணி நேர உதவி மையம் அமைத்ததற்க்காக வழங்கப்பட்டது.
4. பெருநகர சென்னை மாநகராட்சி, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சென்னை சாந்தோமில் இன்க்பினிட்டி பூங்கா அமைத்ததற்க்காக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
* 3 இளைஞர்களுக்கு முதலமைச்சரின் மாநில இளைஞர்களுக்கான விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். நாமக்கல் நவீன்குமார், திண்டுக்கல் ஆனந்த்குமார், மதுரை கலைவாணிக்கு மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டது.
*சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருதை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பெற்றது.
*மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான மிகச்சிறந்த சேவை புரிந்தவருக்கான விருது வேப்பேரியில் உள்ள தொண்டு நிறுவனமான ஆப்பர்சுனிட்டி அறிவுசார் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளிக்கு வழங்கப்பட்டது.
*சிறந்த மருத்துவருக்கான விருது, கோவை அரசு மருத்துவக்கல்லூரியில், விபத்து சிகிச்சை பிரிவில் செயல்படும் முடநீக்கியல் இயக்குனர் செ.வெற்றிவேல் செழியன்க்கு வழங்கப்பட்டது.
*மேலும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத்துறை தலைவராக பணி புரியும் மருத்துவர். வி.ரமாதேவிக்கு சிறந்த மருத்துவருக்கான விருது வழங்கப்பட்டது.
*மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலை வாய்ப்பு வழங்கியதர்க்கான விருதை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனமான எவரெஸ்ட் ஸ்டேபிளேசர்ஸ் பிரைவேட் லிமிட்டெட் பெற்றது.
*சிறந்த சமூகப்பணியாளருக்கான விருது, திருவான்மியூரில் உள்ள பாத்வே சோபின் நிறுவனத்தின் இணை நிறுவனரான சந்திரா பிரசாத்க்கு வழங்கப்பட்டது.
*சிறந்த சமூகப்பணியாளருக்கான (மகளிர் நலன்) விருது கன்னியாகுமரியைச் சேர்ந்த சூசை மரியான், அவர்களுக்கு வழங்கப்பட்டது.
*சிறந்த தொண்டு நிறுவனம் (மகளிர் நலன்)விருது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த போதிமரம் தொண்டு நிறுவனதிற்கு வழங்கப்பட்டது.