எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை செய்துள்ளோம்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி ஒருவர் இல்லாத போதிலும் பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதிருந்தும் கடந்த 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் மாவதகம பகுதியில் அபிவிருத்தி பணிகள் சிலவற்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், தற்போதைய அரசாங்கத்தை எண்ணி பிரமித்துள்ளேன் காரணம் எமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை.

மேலும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையில் வேறு கட்சியை சார்ந்தவர்கள் உள்ளனர், அதனால் இந்த அரசாங்கத்தை கொண்டு செல்வது கடினம் என பலர் கூறினர்.

இதற்கு முன்னர் இருந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனாலும் அவர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க முடியாது இரண்டு வருடத்திலேயே தேர்தல் ஒன்றுக்கு சென்றனர்.

ஆட்சி கிடைத்தால் இடைநடுவில் விட்டு செல்வதில்லை. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் எந்தவொரு அரசாங்கமும் செய்யாத வேலைகளை தற்போதைய அரசாங்கம் செய்துள்ளது.

எனவே அடுத்த முறை பெரும்பான்மையை அமைத்துக்கொண்டும், சகல பதவிகளையும் பெற்றுக்கொண்டு நிலையான நாட்டையும், அபிவிருத்தியையும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

Related posts