ப. சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஐ.என்.எக்ஸ் முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் நேற்று சிபிஐயால் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது என்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இன்று செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “ சிதம்பரத்தின் கைது விவகாரத்தில் கையாளப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. இது மிகவும் மோசமானதும் கூட. இந்த வழக்கின் சட்ட விஷயங்களைப் பற்றி நான் பேசவில்லை. ப.சிதம்பரம் மூத்த அரசியல்வாதி, முன்னாள் நிதி மற்றும் உள்துறை மந்திரியாக இருந்தவர்” என்றார்.