வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களைப் பொறுத்தவரை இலங்கை மிக நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் மாபெரும் பொறுப்பு ஒன்றைக் கொண்டிருக்கிறது. அவ்வலுவலகத்தின் சவால்மிக்க ஆணையை நிறைவேற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒத்துழைப்பு அவசியமாகும்.
நீண்டகால நோக்கிலான நிலைபேறான முயற்சிகளின் ஊடாகவே துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கான தீர்வையும், மீட்சியையும் அளிக்க முடியும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியிருக்கிறது.
சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள்சபை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.