விருது கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது என தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகருள் ஒருவர். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலமாக திரைப்படங்களில் கூறும் நடிகர் விவேக் சினிமா மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வம் கொண்டவர். இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் ஜனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட, 108 வயது கொண்ட பத்மஶ்ரீ ஆலமர திம்மக்காவுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகர் விவேக் இவ்விருதினை வழங்கினார். விருதினை வழங்கிய நடிகர் விவேக் நெகிழ்ச்சியான அத்தருணத்தில் திம்மக்காவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இது தொடர்பாக நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,
கர்நாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட, 108 வயது, பத்மஶ்ரீ “ஆலமர திம்மக்கா”வுக்கு பெண் சாதனையாளர் விருது கொடுக்கும் வாய்ப்பு, எனக்குக் கிடைத்த விருது என பதிவிட்டுள்ளார்.