கொழும்பிலிருந்து அருவக்காடு கழிவுப் பொருள் பிரிவிற்கு, கழிவுப் பொருட்களை கொண்டு செல்வதற்கு புத்தளம் நகர் பகுதியில் இன்று அதிகாலை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தமான புத்தளத்திற்கான அமைப்பினால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தளம் – அருவக்காடு பகுதிக்கு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லும் டிபர் வாகனங்களுக்கு சுமார் 500ற்கும் அதிகமானோர் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் சில பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் அழைக்கப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்பு பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கழிவுப் பொருட்களை கொண்டு சென்ற சில டிபர் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டிபர் வாகனங்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ மோட்டார்கள் சைக்கிள்கள், பொலிஸ் ஜுப்கள் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.