அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்வர், அமைச்சர்கள் ரகசியமாக வெளிநாடு செல்லவில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் கடைசி ஆசையும் கூட தவிடுபொடியாகி விட்டது.
நடிகர் விஜய் திமுகவுடன் தாராளமாக சேர்ந்து கொள்ளட்டும். நடிகர் விஜய் திமுகவுடன் சேர்ந்தாலும், அதிமுகவிற்கு எந்த பாதிப்பும் வராது, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும். அமெரிக்கா ரஷ்யா அதிபர்களை திமுக சந்தித்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு வரும் என்றால், அதை கண்டிப்பாக ஏற்கமாட்டோம். பாதிப்பு எதுவும் வராதபட்சத்தில் அத்திட்டத்தை ஏற்போம் என கூறினார்.
—–
சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் விஜய் ஆகியோர் சந்தித்த நிகழ்வு இரு தரப்பினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி- செல்வம் தம்பதியின் மகள் வழி பேத்திக்கு, எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய், மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்த நிலையில், துரைமுருகன் உள்ளிட்டோர் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த சந்திப்பு, திமுக மற்றும் விஜய் தரப்பினரிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.