பிரதான கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினையை கண்டுக்கொள்ள தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் நேற்று (22) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாம் இன்று வாழ்வதற்கு உகந்த நாடொன்றில் வாழவில்லை என தெரிவித்தார்.
மக்கள் எதிர்காலம் தொடர்பான பயத்தில் வாழ்கின்றனர். ஒவ்வொரு மனங்களிலும் பிரச்சினைகள் நிரம்பி வழிகின்றது அவற்றுக்கு கோட்டாபய ராஜபக்ஷ தீர்வை வழங்க மாட்டார்.
அதேபோல் ஐ.தே.கவுக்கு வாக்களிப்பதால் இந்த நிலைமை மாறபோவதில்லை. அவர்கள் கடந்த நான்;கரை வருடங்களாக எதேனும் ஒன்றை செய்திருந்தால் மீண்டும் அதிகாரத்தை கேட்க அவசியம் இல்லை.
அந்த கட்சி மீண்டும் நாட்டை கட்டியெழுப்பும் முறை தொடர்பில் கதைபதற்கில்லை. அவர்கள் வேட்பாளர் குறித்தே தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்ளாதவர்கள் எவ்வாறு நாட்டை கொண்டு செல்ல போகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.