அமைச்சர் சஜித் பிரேமதாச மாத்திரமல்ல. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எந்த வேட்பாளருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிக்காது என அக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அக் கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்படவுள்ள நிலையில், சுதந்திர கட்சியின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பரந்துபட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் சின்னம் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் இரு தரப்பிலும் முரண்பாடுகள் காணப்படுகின்றமையால் இன்னமும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனவே பொதுஜன பெரமுனவுடனான பேச்சு வார்த்தையின் நிறைவிலேயே எமது இறுதி நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.