கோட்டா – ஹிஸ்புல்லாஹ் மறைமுக உடன்பாடு அம்பலம்

ஹிஸ்புல்லாஹ்விற்கும் கோட்டாவிற்கும் மறைமுக உடன்பாடு உள்ளது இதனூடாகத் தெளிவாகின்றது. இவ்வாறு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் ஹிஸ்புல்லாஹ்வின் தேர்தல் பிரச்சார மேடைகளில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியூடாக உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள் உறுப்பினாகள்; எவ்வாறு அமர முடியும் அவரை ஆதரித்து எவ்வாறு உரையாற்ற முடியும்? என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

சஜித் பிரேமதாசவை ஆதரித்து காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தனக்கும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என ஹிஸ்புல்லாஹ் தொடர்ந்தும் கூறிவருவது, மக்களை மடையர்களாக மாற்றும் செயல். ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி இந்தத் தேர்தலில் கோட்டாய ராஜபக்சவிற்கு முழுமையான ஆதரவை வழங்குகிறது.அப்படியாயின் கோட்டாவை எதிர்த்து தேர்தலில் நிற்கின்ற ஹிஸ்புல்லாஹ்விற்கு எவ்வாறு ‘லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் நேரடியாக ஆதரவு வழங்க முடியும்

இனவாத ரீதியாக முஸ்லிம் சமுகத்தில் பலவேறு அட்டூழியங்களை அரங்கேற்றிய கோட்டாவை வெற்றிபெறச் செய்யவே மறைமுகமாக ஹிஸ்புல்லாஹ் களமிறங்கியுள்ளார் என்பது நாடறிந்த விடயம்.நேரடியாகச் சொன்னால் முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதால் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்காமல் தடுத்தால் கோட்டா வென்றுவிடுவார் என்பவே ஹிஸ்புல்லாஹ்வன் கனவாகும் என்றார்.

Related posts